ஓடும் ரயிலில் அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Oct 01, 2022, 07:30 AM ISTUpdated : Oct 01, 2022, 07:44 AM IST
ஓடும் ரயிலில் அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன். இவர் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறியுள்ளார். குளிரூட்டப்பட்ட முன்பதிவு பெட்டியில் பயணித்த அவருக்கு நள்ளிரவில் சுமார் 2 மணியளவில் ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- நீ எல்லாம் மூத்த அமைச்சரா.. உன் அப்பன் வீட்டு பணமா.?? ஓசி என பேசிய பொன்முடியை ஓங்கி அடித்த நாராயணன் திருப்பதி

இதனையடுத்து, சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அமைச்சர் மெய்யநாதன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.  

அமைச்சர் மெய்ய நாதன் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அமைச்சர் சிகிச்சை பெற்று வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

இதையும் படிங்க;-  அதிகாரம் இருக்குது என்பதால் மமதையில் ஆட்சியாளர்கள் ஒவரா ஆடாதீங்க.. திமுகவை எச்சரிக்கும் பாஜக..!

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்