உண்மை தன்மையை அறிந்து சமூக வலைதளத்தில் செய்தியை பகிருங்கள்… Twitter Spaces-ல் ஸ்டாலின் உரை!!

By Narendran SFirst Published Sep 30, 2022, 10:04 PM IST
Highlights

செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு சமூக வலைதளத்தில் அதனை பகிர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு சமூக வலைதளத்தில் அதனை பகிர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். செப்டம்பர் மாதத்தினை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி Twitter Spaces இல் திராவிடத்தை கொண்டாடுவோம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நாள்தோறும் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். இந்த நிலையில், செப்டம்பர் மாதம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், இறுதி நாளான இன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இதையும் படிங்க: ஆ.ராசா பேசினால் முதல்வர் கேட்பார், ஆனா நாங்க? திமுகவின் சரிவு தொடக்கம் - திமுகவை விளாசிய சி.பி.ஆர் !

அப்போது பேசிய அவர், திராவிடம் தமிழருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது, சமூக நீதியை நிலை நாட்டியது. திராவிடம் பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்தது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. திராவிடம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிரவைத்தது. கழகத்தின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் தளமாக சமூக வலைதளத்தை பயன்படுத்த வேண்டும். தங்களுக்கென வரலாறு இல்லாதவர்கள் கொள்கை இல்லாதவர்கள் பொய்களை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். அவ்வாறு பரப்பப்படும் பொய்களுக்கு கலைஞர் தனது கடிதங்கள் மூலமாகவோ அறிக்கைகள் மூலமாகவோ பதிலளித்திருக்கிறார்.

இதையும் படிங்க: “சவுக்கு சங்கருக்கு பார்வையாளர் சந்திப்புக்கான அனுமதி மறுப்பு ஏன் ? பாரபட்சம் எதற்கு ? கொந்தளித்த சீமான் !”

ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் காரணம் புதிதாக வரும் இளைஞர்களுக்கு பொய்களை அறிமுகம் செய்யவே. அப்படிப்பட்ட பொய்செய்திகளை திமுக தகவல் தொழில்நுட்ப அணி தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு செய்தி வந்தால் அந்த செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு சமூக வலைதளத்தில் பகிர வேண்டும். நமது எதிரிகள், மதவாத சாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள் கொச்சையாக பேசுவார்கள், கோபப்படுத்த பேசுவர்கள், இவை அனைத்தையும் புறந்த தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

click me!