கடந்த 10 ஆண்டுகளாக ஜெயலலிதா கையில் மக்கள் ஆட்சியை ஒப்படைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல்களால் தற்போது திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
தற்போது கலைஞர் கருணாநிதியை போல் பொய்யான வாக்குறுதியை கூறி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார் என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் மறைந்த ராவணன் குடும்பத்தினரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் சிறு அணில்போல் செயல்படும். அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க;- மிஸ்டர் எடப்பாடி... "இனி நாங்க ஜீரோ இல்ல ஹீரோ"... இபிஎஸ்சை எகிறி அடித்த வைத்திலிங்கம்.
அதிமுகவினர் தன்னோடு பேசுவதை அரசியலாக பார்க்க வேண்டாம். அரசியல் என்பது வேறு பழக்க வழக்கம் என்பது வேறு. இரண்டையும் குழப்ப வேண்டாம் என்றார். ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஜெயலலிதா கையில் மக்கள் ஆட்சியை ஒப்படைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல்களால் தற்போது திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
தற்போது கலைஞர் கருணாநிதியை போல் பொய்யான வாக்குறுதியை கூறி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார். ஏன் திமுகவுக்கு ஓட்டு போட்டோம் என மக்கள் சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அமைச்சர்களின் ஆணவப் பேச்சுகள், கட்சியனரின் நடவடிக்கைகள், முதல்வர் குடும்பத்தின் அடாவடிகள் எல்லாம் வெளியில் வந்துகொண்டிருக்கின்றன. என்.ஐ.ஏ சோதனை நடத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறுவது, ஆயுதங்களை கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது தமிழகத்தில் 2024ம் ஆண்டே சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- நீ எல்லாம் மூத்த அமைச்சரா.. உன் அப்பன் வீட்டு பணமா.?? ஓசி என பேசிய பொன்முடியை ஓங்கி அடித்த நாராயணன் திருப்பதி