அநாகரீகத்தின் மொத்த வடிவாக பா.ஜ.கவினர் சுற்றி கொண்டிருப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாககோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலந்து கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தொண்டனின் கால் நகத்தில் இருக்கும் அழுக்கிற்கு கூட தகுதியற்ற அண்ணாமலை எங்கள் தலைவரை பற்றி எப்படி பேச முடியும்? திமுகவினருக்கு இதை விட அநாகரீகமாக பேச தெரியும் ஆனால் நாங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் இருக்கிறோம். ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு கனிமவளம் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதித்துள்ளது.
குவாரிகள் இருப்பதை 10 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு வந்தவர் யார் என்பதை கேளுங்கள். பாராளுமன்ற நடைமுறைக்கு எதிரான வார்த்தைகளால் நான் பிரதமரை பேசவில்லை. சனாதனம், செங்கோல் குறித்து எனக்கு கருத்து சொல்வதற்கு உரிமை உள்ளது.
நீலகிரியில் பள்ளத்தில் விழுந்த மாணவனை அப்படியே விட்டுச்சென்ற நண்பர்கள்; உடலை கைப்பற்றி விசாரணை
இந்நாடு ஜனநாயக நாடாக, குடியரசு நாடாக அமைவதற்கு முன்னாள் ஆட்சியாளர்களின் அடையாளம் செங்கோல். மக்களாட்சி வந்த பின் நாட்டின் ஆட்சி அடையாளம் என்பது அரசியல் சாசனம். அந்த கருத்தை நான் சொல்வதற்கு கூட எனக்கு உரிமை இல்லை என்று அண்ணாமலை நினைத்தால் அது அவரது காரியம்.