குழந்தையின் எதிர்கால விஷயம்,தொடர்ந்து பேசினால் நன்றாக இருக்காது.! முற்றுப்புள்ளி வைக்கிறோம்.! மா.சுப்பிரமணியன்

By Ajmal KhanFirst Published Jun 6, 2023, 12:44 PM IST
Highlights

மருத்துவ படிப்பிற்கான மத்திய அரசு கலந்தாய்வு அறிவித்த  அடுத்த நாளே தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழக வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில்  28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 'அண்ணா சாலை' பூங்காவிற்கான அடிக்கல்லை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நாட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சைதாப்பேட்டை அண்ணா சலையில் மாநகராட்சி சார்பில் 28 லட்சம் ரூபாய் பூங்கா தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

169 வது வார்டில் நியாயவிலை கடை அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை ஏற்று தற்போது 14.5 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்து அறிக்கை வெளியிட்டது தொடர்பான  கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் கூறும் விமர்சனம் இது . இதுவே ஆளுநருக்கு பொருந்தும் என கூறினார். 

குழந்தை திருமணம்- முற்றுப்புள்ளி

சிதம்பரம் குழந்தை திருமணம் விஷயம் வீடியோ தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம் தொடர்ந்து அது குறித்து பேசினால் நன்றாக இருக்காது. ஆளுநரும் தெரியாமல் பேசி வருகிறார். இது குறித்து விமர்சனம் செய்யாமல் முற்றுப்புள்ளி வைக்கிறோம் என தெரிவித்தார். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை மத்திய அரசு அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அடுத்த நாளே தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

தர்மபுரி, பெரம்பலூர், சென்னை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது பாதிப்படையாது என தெரிவித்த அவர் விரைவில் மதிய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறினார். 

இதையும் படியுங்கள்

பல உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளீர்கள்.! தமிழகத்தை சேர்ந்த என்டிஆர்எப் வீரருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

click me!