முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்

By Velmurugan s  |  First Published Oct 12, 2023, 11:57 AM IST

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரயங்கா பதவி விலகிய விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.


புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வைத்திலிங்கம், முதலமைச்சர் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்த்து வாங்குவதற்கான எந்த அக்கறையும் இல்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 6 மாதம் கழித்துத்தான் ஆளுநருக்கு சென்று, பிறகு அந்த கோப்பு டில்லிக்கு சென்றபோது எந்த அமைச்சரும் டில்லிக்கு சென்று அழுத்தம் கொடுக்கவில்லை. மேலும் அடுத்த 2 வருடத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வாங்கி கொடுப்பாரா என்றால் அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 

Latest Videos

நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து அதை நிறைவேற்றுவோம் என கூறும் பாஜக, கூட்டணி அரசில் உள்ள பெண் அமைச்சரை நீக்கியது ஆணாதிக்க ஆட்சி நடக்கின்றது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது பாஜக செய்யும் ஏமாற்று வேலை என்பதை பெண் அமைச்சர் ராஜினாமா செய்ததன் மூலம் உறுதியாகியுள்ளது. அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்வர் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர் கூறிய புகார் உண்மையாகும். ஒரு பெண் என்ற முறையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவளிக்கும் என்றார்.

மதுரையில் மீனாட்சி அம்மன் சிலை மீது அமர்ந்து அம்மனை கொஞ்சி மகிழ்ந்த பச்சை கிளி; பக்தர்கள் பரவசம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நான்கு நாட்களுக்கு முன்பு ஆளுநரை சந்தித்து அமைச்சர் சந்திர பிரியங்காவை நீக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்து அது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அதற்கான அனுமதி நேற்று காலையில் கிடைத்த நிலையில் தான் தகவலறிந்த அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

சாரட்டு வண்டியில் சீர் வரிசைகளுடன் அழைத்து வரப்பட்ட தவளைகள்; மழை வேண்டி  மக்கள் வினோத வழிபாடு

முதலில் டிஸ்மிஸ் செய்ய வேண்டியது முதல்வர் ரங்கசாமியை தான். தலித் பெண் அமைச்சரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்துள்ளார்கள். பெண் அமைச்சர் கூறிய புகார் குறித்து முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் நாராயனாசாமி வலியுறுத்தியுள்ளார்.

click me!