அதிமுக பாஜக கூட்டணி முறிவு யாருக்கு உற்சாகமோ இல்லையோ ஓபிஎஸ் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலில் பாஜக, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தேசிய தலைமை உடன் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறேன். கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு யாருக்கு உற்சாகமோ இல்லையோ ஓபிஎஸ் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலில் பாஜக, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாருடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க;- 173 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கத்தை தொடர்ந்து லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்;- துணை முதலமைச்சர் பதவி என்பது டம்மி போஸ்ட். அந்த பதவிக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. 4 வருடம் நான் அந்த பதவியில் தான் இருந்தேன். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. அதுபோல தான் இதுவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாங்கள் தான் அதிமுக, இரட்டை இலை வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. பாஜக தேசிய தலைமை உடன் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறேன். கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாடு நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம் என ஓபிஎஸ் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இரட்டை இலை வழக்கு குறித்து ஓபிஎஸ் கூறியுள்ள கருத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.