பாஜகவுடன் கூட்டணி முறிவு..! அதிமுக பக்கம் திரும்பும் இஸ்லாமிய அமைப்புகள்- அதிர்ச்சியில் ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Oct 12, 2023, 9:09 AM IST

இஸ்லாமிய அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த வந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதையடுத்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இஸ்லாமிய இயங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  
 


அதிமுக- பாஜக கூட்டணி முறிவு

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்தது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணியானது தோல்வி அடைந்தது. அதிமுகவின் இந்த தோல்விக்கு காரணம் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவிற்கு செல்லவில்லை என்று கூறப்பட்டது.  

Latest Videos

undefined

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ சமுதாய மக்கள் அதிமுகவிற்கு எதிராகவே வாக்களித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பாஜக  கூட்டணியில் நீடித்தால் சிறுபான்மை ஓட்டுக்கள் அதிமுகவிற்கு கிடைக்காது எனத் தெரிவித்து இருந்தனர். 

இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை?

இந்த சூழ்நிலையில் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது.  இதனை எடுத்து அதிமுக பாஜக இடையிலான நான்கு ஆண்டுகள் கூட்டணிக்கு முடிவுக்கு வந்தது.  இந்த நிலையில் தண்டனை காலம் முடிவடைந்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கோரிக்கை எழுப்ப இஸ்லாமிய அமைப்புகள் அதிமுகவை வலியுறுத்தி இருந்தனர். அதன் படி தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்து இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். 

எடப்பாடியை சந்தித்த இஸ்லாமிய அமைப்புகள்

இதனையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிதற்கு பாராட்டு தெரிவித்தும், இஸ்லாமிய சிறை கைதிகள் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கும் தமிமுன் அன்சாரி, தடா ரஹீம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதேபோல எஸ்டிபிஐ கட்சி சேர்ந்த நெல்லை முபாரக்,  ஓவைசி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் பல இஸ்லாமிய இயக்கங்கள் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்படவும் விருப்பம் தெரிவித்தனர்.  

அதிமுகவிற்கு ஆதரவு- அதிர்ச்சியில் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு இஸ்லாமிய கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்பொழுது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை அடுத்து இஸ்லாமிய அமைப்புகள் அதிமுகவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருவது திமுக தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

H. RAJA : பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..

click me!