கோவை குண்டுவெடிப்பை தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். சிறையில் இருப்பவர்களை வெளியில் விடக் கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய கைதிகள் விடுதலை.?
இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பேசினர். அப்போது தண்டனை காலத்தை கடந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில்,
undefined
முதல்கட்டமாக 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகள் 24.8.2023 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கோயம்புத்தூர் போன்ற அமைதியான நகரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் 1998 ஆம் ஆண்டு வெடிகுண்டு வெடித்ததில் 58 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் நிறுத்திவைத்தது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கொடூரமான செயல் என்று மீண்டும் வலியுறுத்தியது. இந்தநிலையில் இதையெல்லாம் மீறி, தமிழக சட்டசபையில், கோவை குண்டுவெடிப்பு மற்றும் பிற கொடூரமான செயல்களில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பயங்கரவாதிகளை விடுதலை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
In February 1998, a bomb blast by Radical Islamic Fundamentalists in a serene city like Coimbatore led to the loss of 58 lives and injured over 200.
The SC last week stuck down the bail application filed by a few convicts in this case & reiterated it as an atrocious act. Despite…
விடுதலை செய்யக்கூடாது
1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தால் காயம் இன்னும் ஆறாத நிலையில், சிறுபான்மையினரை திருப்தி செய்ய இந்த விவாதம் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் கூறும் பொழுது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதை, நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தீவிரவாதத்துக்கு வண்ணம் கிடையாது. தீவிரவாதத்தை ஒரு சமுதாயத்துக்குள், சாதிக்குள், மதத்துக்குள் அடைக்க வேண்டாம். கோவை குண்டுவெடிப்பை தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை வெளியில் விடக் கூடாது.
வெளியில் விடக்கூடாது
தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிகள்தான். இன்னும் அங்கு தீவிரவாதம் ஒழியவில்லை, அப்படியே இருக்கிறது. எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகளா என்றால் அது கிடையாது. மேலும், இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை வெளியில் விடக் கூடாது என்று நான் கூறவில்லை. தீவிரவாதிகள் என்பதால் அவர்களை வெளியில் விடக் கூடாது என்கிறேன் என அண்ணாமலை தெரிவித்தார்.