இந்த தனியார் பள்ளியில் என்ன நடக்குது.. 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம்.. பகீர் கிளப்பும் அன்புமணி.!

By vinoth kumar  |  First Published Jul 15, 2022, 12:04 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. 


மர்மமான முறையில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான் சொன்ன யோசனை செயல்வடிவம் பெற்றுவிட்டது.. அன்புமணி ராமதாஸ்..!

கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதுதான் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை ஆகும். அந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை ஆகும். அந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.(3/3)

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)

 

மர்மமான முறையில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அவரது இறப்புக்கு காரணமானவர்களுக்கு தமிழக அரசு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- பாமக நிறுவனர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு

click me!