பொன்னையன் முன்பை போல் இல்லை..! பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார்-சீறிய துரைமுருகன்

By Ajmal Khan  |  First Published Jul 15, 2022, 10:40 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குவாரிக்கு  ஏற்கனவே சீல் வைத்துள்ளதாகவும், சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்து குவாரி ஒன்றை கே.பி.முனுசாமி பெற்றுள்ளார் என  நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 


பொன்னையன் சர்ச்சை ஆடியோ

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் திமுகவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சிப்பதில்லையென்றும், தங்கமணி தனது சொத்தை பாதுகாக்க அமைதியாகிவிட்டார் என தெரிவித்து இருந்தார். மேலும் கே.பி.முனுசாமி திமுக அமைச்சர் துரைமுருகன் உதவியோடு குவாரி டெண்டர் எடுத்துள்ளதாகவும் இதன் மூலம் மாதம் 2 கோடி ரூபாய் கே.பி.முனுசாமிக்கு கிடைப்பதாக கூறியிருந்தார். இது போல அதிமுக நிர்வாகிகள் தொடர்பாகவும் தனது கருத்தை பொன்னையன் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Tap to resize

Latest Videos

பொன்னையன் ஆடியோ.. கே.பி. முனுசாமி குவாரி எடுத்திருக்கிறாரா.? உண்மையை போட்டு உடைத்த துரைமுருகன்!

சர்ச்சை ஆடியோ.. கடுப்பில் முன்னாள் அமைச்சர்கள்.. திடீரென இபிஎஸ்- பொன்னையன் சந்திப்பு

பொன்னையன் முன்பை போல் இல்லை

இந்தநிலையில்  கீழ்பாவாணி பாசன விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றுது. இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன்,மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தடுப்பூசிகளை போட்டுள்ளார் ; விரைவில் நலமடைந்து வருவார் என தெரிவித்தார்.பொன்னையன் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக கேட்டபோது  பொன்னையன் முன்பைப் போல இல்ல ; பைத்தியக்காரன் போல எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார் என பதிலளித்தார். அவருடைய குவாரிக்கு ஏற்கனவே சீல் வைத்துள்ளோம் சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்து ஒரு குவாரியை கே.பி.முனுசாமி  பெற்றுள்ளார்  என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

சின்னவர் என என்னை கூப்பிட்டால் பலருக்கு வயிற்றெரிச்சல்...! எதிர்கட்சிகளை கலாய்த்த உதயநிதி

click me!