‘ பணம் எடுக்க அளவா? மக்கள் பிச்சைக்காரர்கள் கிடையாது மோடி’ முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

First Published Dec 31, 2016, 4:57 PM IST
Highlights
‘ பணம் எடுக்க அளவா? மக்கள் பிச்சைக்காரர்கள் கிடையாது மோடி’

முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா, ஜன. 1-

நாள் ஒன்றுக்கு ஏ.டி.எம்.களில் இருந்து ரூ.4500 எடுக்கலாம் என்று கூறி மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்காதீர்கள் பிரதரம் மோடி என்று மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.

எதிர்பார்பு, ஏமாற்றம்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், ஏ.டி.எம்.களில் நாள் ஒன்றுக்கு ரூ.2,500, வங்கிகளில் இருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியாகி 50 நாட்கள் முடிந்தபின், அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், ஏ.டி.எம்.களில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.2500 எடுக்கும் அளவை அதிகரித்து ரூ.4500 ஆக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதேசமயம், வங்கியில் இருந்து வாரத்துக்கு எடுக்கும் பண அளவை உயர்த்தவில்லை.

50 நாட்கள்

இது குறித்து மேற்குவங்காள முதல்வர் மம்தாபானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ கடந்த 50 நாட்களாக மக்கள் ஏ.டி.எம்., வங்கிகளிலும் பணம் எடுக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு ஏ.டி.எம்.களில் இருந்து நாள் ஒன்றுக்கு  ரூ.4500 ஜனவரி 1-ந் தேதியில் இருந்து எடுக்கலாம் என விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.

பிச்சைக்கார்கள் இல்லை

பிரதமர் மோடி, மக்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை. நீங்கள் கூறிய 50 நாட்கள் முடிந்தபின்னும், வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க ஏன் இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்கிறீர்கள்?

உரிமையை பறிக்கமுடியாது

நீங்கள் கூறிய கெடுதான் முடிந்துவிட்டதுதானே?. நாட்டின் சாமானிய மக்கள் உழைத்துச் சம்பாதித்து, வங்கியில் சேமித்த  பணத்தை எடுக்க விடாமல் செய்வது, அவர்களின் உரிமையை பறிப்பது போன்றதாகும். மக்களின் பொருளாதார உரிமையை ஒரு அரசு அவ்வளவு எளிதாக பறித்து விடமுடியாது என்பதைமத்தியஅரசு  புரிந்துகொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

 

click me!