கஜினி முகமது போல் எத்தனை முறை கொரோனா படையெடுத்தாலும் தோற்கடிப்போம். தெறிக்க விட்ட ராதாகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Mar 12, 2022, 12:41 PM IST
Highlights

சீனாவில் சான் ஜூன் என்ற நகரில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மற்றும் இரண்டாம் அலையில் ஆக்சிசன் தட்டுப்பாடு இருந்தது. அப்போது தடுப்பூசி செலுத்துவதில் அதிகம் இருந்ததால் தான் தற்போது கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது‌ என்றும், வருங்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம் எனவே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்,
 

கஜினி முகமது போல் எத்தனை முறை கொரோனா  படை எடுத்தாலும் நாம் தோற்கடிப்போம் என சுகாதாரத்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவகல்லூரியில் 24 வது மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- 24 வது மெகா தடுப்பூசி தினம் இன்று 91.77 விழுக்காடு முதல் தவணை செலுத்திவுள்ளார்கள் என்றும் பொதுமக்கள் நோய் குறைந்துவிட்டது என்று தடுப்பூசி செலுத்தாமல் இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 73% பேர் இரண்டாவது தவணையும் செலுத்தியுள்ளார்கள்,தமிழகத்தில் 1461 பேர் மட்டுமே தற்போது நோய்த்தொற்று உள்ளவர்கள் .உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துகளை  பின்பற்றியதால் நேற்று ஏப்ரல் 30,2020 க்கு பிறகு 0 இறப்பு வந்துள்ளது எனவும்,  

இதையும் படியுங்கள்: சுயநலப் பேர்வழிகள் மத்தியில் அம்மா விட்டுச்சென்ற உண்மை உறவு.. உருகும் ஜெ.உதவியாளர் பூங்குன்றன்..!

கஜினி முகமது போல் எத்தனை முறை கொரோனா  படை எடுத்தாலும் நாம் தோற்கடிப்போம் என்றார். சீனாவில் சான் ஜூன் என்ற நகரில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மற்றும் இரண்டாம் அலையில் ஆக்சிசன் தட்டுப்பாடு இருந்தது. அப்போது தடுப்பூசி செலுத்துவதில் அதிகம் இருந்ததால் தான் தற்போது கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது என்றும், வருங்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம் எனவே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: மோடி கொடுத்த மரண அடி.. முடிவை மாற்றிக் கொண்ட மம்தா.. இனி காங் கை நம்ப முடியாது, தலையில் அடித்து கதறும் தீதி.

கிராமப்புறங்களில் 2 தெருக்களில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். நகர்ப்புறங்களில் 3 இடங்களில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர் என தெரிவித்தார். 2 லட்சம் படுக்கைகள் தயாராக வைத்ததுள்ளோம்‌ என்றும் டெங்கு தாக்குதலும் குறைந்து வருகிறது. எலி காய்ச்சல், மூளை காய்ச்சல் உள்ளிட்ட மற்ற நோய்களையும் கண்காணித்து வருகிறோம் என்றும், தமிழகம் கொள்முதல் செய்யும் மருந்துகளை அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு அருகில் இருக்கும் மாலத்தீவுக்கு அளிக்கலாம் என்ற திட்டம் செயல்பாட்டிற்கு பேசப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

click me!