எவ்வளவு அவமானப் பட்டாலும் திருந்தாது இந்த காங்கிரஸ் .. கழுவி கழுவி ஊற்றிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்.

By Ezhilarasan BabuFirst Published Mar 12, 2022, 12:20 PM IST
Highlights

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து கூறியுள்ள அமரிந்தர் சிங் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் காங்கிரஸ் தலைமை ஒருபோதும்  பாடம் கற்காது. பஞ்சாபில் தோற்றதற்கு காரணம் நான் தான் என்றால், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு யார் காரணம். 

எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் அதிலிருந்து காங்கிரஸ் பாடம்  கற்றுக்கொள்ளாது என முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸின் தோல்விக்கு முன்னாள் முதல்வர் அமர்ந்தர் தான் காரணம் என கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டி உள்ள நிலையில் அமரிந்தேர் சிங் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

மண்ணை கவ்விய காங்கிரஸ்: 

நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் எண்ணிக்கை தற்போது இரண்டு மாநிலமாக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இத் தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் தலைகீழாக வந்துள்ளன. பஞ்சாப்பை தவிர நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் பாஜகவின் வலிமை மேலும் அதிகரித்துள்ளது.

அமரிந்தர் சிங்கதான் காரணம்..?

காங்கிரசின் வலுவான மாநிலமாக இருந்த பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் 92 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி ஆட்சியை அமைக்க உள்ளது. ஆனால் அங்கு காங்கிரஸ் கட்சியை வெறும் 18 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஒரு வலுவான எதிர்கட்சி என்ற அந்தஸ்த்தையும் காங்கிரஸ் இழந்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் இந்த அளவிற்கு தோல்வியை சந்தித் திருப்பதற்கு முன்னாள் முதலமைச்சரான அமரிந்தர் சிங் தான் காரணம், அவரின் கடந்த கால நான்கரை ஆண்டு ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தான் காரணம், அந்த எதிர்ப்பை தான் காங்கிரஸ் கட்சியால் சமாளிக்க முடியவில்லை என விமர்சித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: டாஸ்மாக் வருமானம் இனிக்கிறது !! கிராமசபை தீர்மானம் கசக்கிறதா ? ஸ்டாலின் அரசை டரியல் ஆக்கிய மநீம.

காங்கிரஸ் திருந்தவே திருந்தாது..

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து கூறியுள்ள அமரிந்தர் சிங் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் காங்கிரஸ் தலைமை ஒருபோதும்  பாடம் கற்காது. பஞ்சாபில் தோற்றதற்கு காரணம் நான் தான் என்றால், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு யார் காரணம்.  கோவா, மணிப்பூர், உத்ரகாண்ட் மாநிலத்தில் பெற்ற தோல்விக்கு என்ன சொல்வார்கள். காங்கிரஸ் கட்சிக்கான தோல்வி சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் எப்போதும் போல காங்கிரஸ் அதை படிப்பதை தவிர்த்து விடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரே பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் உட்கட்சி மோதல் காரணமாக கட்சியில் இருந்து விலகி பஞ்சாம் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். சிலர் பாஜகவுடன் கூட்டணி வைத்து அவர் தேர்தலை சந்தித்த நிலையில் அவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் காங்கிரஸார் அவரை விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்: மோடி கொடுத்த மரண அடி.. முடிவை மாற்றிக் கொண்ட மம்தா.. இனி காங் கை நம்ப முடியாது, தலையில் அடித்து கதறும் தீதி.


 

click me!