அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு... கூட்டணி தொடருமா? கே.பி.முனுசாமி கூறுவது என்ன?

By Narendran SFirst Published Mar 9, 2023, 6:25 PM IST
Highlights

அதிமுக பாஜக கூட்டணிக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய நலன் கருதி பாஜக கூட்டணி தொடரும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக பாஜக கூட்டணிக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய நலன் கருதி பாஜக கூட்டணி தொடரும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: சவுதி அரேபியாவில் உயிரிழந்த தமிழக தொழிலாளி… வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உதவிக்கோரிய அண்ணாமலை!!

அந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று மாவட்ட அளவில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் செயல்படக்கூடிய உத்வேகத்தை அவர்களுக்கு அளித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை விட எனது மனைவி ஆயிரம் மடங்கு பவரானவர்: அண்ணாமலை அதிரடி!!

தேர்தலில் கடுமையாக பாடுபட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம் என்று தெரிவித்துள்ளார். 

click me!