தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி சமூகவலை தளத்தில் வெளியிட இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசும் பாஜகவும்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. மின்வாரியத்தில் தவறான முறையில் பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பி.ஜி.ஆர் நிறுவனத்தை பிளாக் லிஸ்ட்டில் வைக்கவில்லை. அந்த நிறுவனத்துக்குக் கடந்த ஆட்சியில் விடப்பட்ட டெண்டர் அது. எனவே, உரிய ஆவணங்கள் வெளியிட்டால்தான் அது சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளிப்பேன் பதிலடி கொடுத்திருந்தார். இருதரப்புக்கும் ஒருவருக்கொருவர் சவால் விடுத்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக அரசு சார்பாக முதலீடுகளை ஈர்ப்பதர்காக துபாய் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
திமுக அரசு மீது புகார் கூறிய அண்ணாமலை
அப்போது தங்கள் சொத்துக்களை முதலீடு செய்ய பயணம் செய்ததாக அண்ணாமலை தெரிவித்து இருந்தது இரு தரப்புக்குமான மோதலை அதிகப்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நல்வாழ்த்துறையில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட கிட்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் இருந்ததாகவும் இதற்கு பதிலாக ஆவினில் தயாரிக்கப்பட்ட ஹெல்த் மிக்ஸ் பவுடரை வழங்கலாம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதன் மூலம் 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்காது என கூறினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விலை குறைவாக உள்ளது என்பதற்காக ஆவினில் வாங்க முடியாது. ஆப்பிளையும் - எலுமிச்சையையும் ஒப்பிடுவது போல உள்ளது அண்ணாமலையின் குற்றச்சாட்டு என பதில் அளித்தார். இதனை தொடர்ந்து வணிக வரித்துறையில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்!
- மாநில தலைவர் திரு. pic.twitter.com/w2dcbuMPHP
ஊழல் பட்டியல் வெளியீடு
இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக அமைச்சர்கள் தங்கள் துறையில் செய்த முறைகேடு தொடர்பாகவும் அண்ணாமலை புகார் மனு அளித்திருந்தார். இந்தநிலையில் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி சமூகவலைதளத்தில் வெளியிட இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு.! காதுகள் இல்லை- இறங்கிய அடிக்கும் மு.க. ஸ்டாலின்