திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியின் சாதனை முதல்வர் மகனும், மருமகனும் கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடி பணத்தை கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற தடுமாறி வருவதே சாதனை என கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக மாநாடு
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பாக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுரை சுற்றுச்சாலை அருகில் பல்வேறு இடங்களை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கான மூன்று இடங்களில் பார்த்துள்ளோம்.
திமுக இரண்டு ஆண்டு ஆட்சி
.இது தொடர்பாக பொதுச்செயளாலர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். அவர் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாநாட்டிற்கான பணியினை துவக்கப்படும் என தெரிவித்தார்.திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில், ஏழை, எளிய அடித்தள மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறுத்தியது தான் சாதனை என விமர்சித்தார். திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியின் சாதனை முதல்வர் மகனும், மருமகனும் கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை, எப்படி வெள்ளை பணமாக தடுமாறி கொண்டு வருவதே சாதனை என விமர்சித்தார். இதனை தாங்கள்கூறவில்லை ஏற்கனவே நிதி அமைச்சர் பி.டி..ஆர் தியாகராஜனே கூறியுள்ளார்.
ஓபிஎஸ்- வெக்கங்கெட்டவர்கள்
திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பிடிஆர் தியாகராஜனுக்கு ஸ்டாலின் பேச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இரண்டு ஆண்டு சாதனை என்று மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயற்சிக்கிறார் .அவர் அடிமனத்தில் பயம் வந்துவிட்டது. உண்மை சுடும் என்பது போல் ,பி.டி.ஆர் தியாகராஜன் மூலமாக இன்றைக்கு வெளிவந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியன் போது ஓ.பன்னீர்செல்வம் ,உதயநிதி சபரீசன் சந்தித்து பேசியது குறித்து கேள்விக்கு , வெக்கங்கெட்டவர்களை பற்றி பேச எனக்கு வெட்கமாக உள்ளது என விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்