கடந்த காலங்களை மறந்துவிட்டு ஒன்றிணைந்துள்ளோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இடது கம்யூனிஸ்டு, வலது கம்யூனிஸ்டு எப்படி சேர்ந்து செயல்படுகின்றதோ அதேபோலத்தான் செயல்படுவோம் என்றார்.
தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று ஓ.பன்னீர்செல்வம் டிடிவி.தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர் என மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை அவரது வீட்டிற்கே நேரில் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். தனது வீட்டுக்கு வந்த ஓ. பன்னீர்செல்வத்தையும் பண்ருட்டி ராமச்சந்திரனையும் வாசல் வரை சென்று வரவேற்ற டிடிவி, இருவருக்கும் பொன்னாடை அணிவித்தார். பின்னர், அரசியல் சூழல் குறித்து ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்திய பிறகு, அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதையும் படிங்க;- சபரீசன் சந்திப்புக்கு காரணம் இதுதான்.. டிடிவி தினகரன் முன் உண்மையை உடைத்த ஓபிஎஸ்
அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்;- அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் தனித்தனியே செயல்பட்டார்கள். அதே இலக்கை அடைய இனி இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளார். தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
கடந்த காலங்களை பேசினால் பேதங்கள் வருத்தங்கள் உண்டாகும். இனி எதிர்காலத்தைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். கடந்த காலங்களை மறந்துவிட்டு ஒன்றிணைந்துள்ளோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இடது கம்யூனிஸ்டு, வலது கம்யூனிஸ்டு எப்படி சேர்ந்து செயல்படுகின்றதோ அதேபோலத்தான் செயல்படுவோம் என்றார்.
இதையும் படிங்க;- பணமூட்டை இருக்கு! உண்மையான ஜெயலலிதா தொண்டர்களிடம் அதிமுக - டிடிவி தினகரன் சொன்னதை கவனிச்சீங்களா
மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. இரு தண்டவாளத்தைப் போலச் சட்ட ரீதியான போராட்டம் தொடரும். அதிமுகவுடன் கூட்டணி உருவாகியிருப்பதாக பாஜக மேலிடம் இதுவரை தெரிவிக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி மட்டுமே கூறி வருகிறார் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.