சசிகலா வெளியூர் சென்றிருப்பதால் அவர்களை சந்திக்க முடியவில்லை. வெளியூர் சென்றுள்ள சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்தார்.
அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனை வாசலில் வந்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார் டிடிவி தினகரன். சில மணி நேரம் நடந்த சந்திப்புக்கு பிறகு ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “கடந்த காலங்களை மறந்துவிட்டு, நானும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்துள்ளோம். சசிகலா வெளியூர் சென்றிருப்பதால் அவர்களை சந்திக்க முடியவில்லை. வெளியூர் சென்றுள்ள சசிகலாவை விரைவில் சந்திப்பேன். தொண்டர்கள் மக்கள் மனதில் உள்ளவற்றை அடிப்படையாக கொண்டு செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் அனைத்து அடிப்படை தொண்டர்களும் இணையவேண்டும் என்பதனையே நோக்கமாக கொண்டுள்ளனர். கிரிக்கெட் போட்டியை பார்க்கச் சென்றபோது மரியாதை நிமித்தமாகவே சபரீசனை சந்தித்தேன். சபரீசனுடனான சந்திப்பு தற்செயலானது” என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓபிஎஸ்.
இதையும் படிங்க..கடைசி 3 அஸ்திரங்கள்! டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பில் அவரும் இருந்தாரு.! அடேங்கப்பா.! என்ன நடந்தது?