அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகவும், பின்னர் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
இதில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தொடர்ந்து பின்னடைவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வந்தார். திருச்சியில் ஓபிஎஸ் நடத்திய மாநாடும் பெரிதாக எடுபடவில்லை. இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
undefined
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனை வாசல் வரை வந்து வரவேற்றார் டிடிவி தினகரன். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பு ஆனது சில நாட்களுக்கு முன்பே திட்டமிட்டது என்று ஆதரவாளர்கள் கிசுகிசுக்கின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன், சசிகலா உடன் இணைந்து செயல்பட தயார் என ஒபிஎஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுக என்ற பெரும் கட்சியை தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றின் உதவியோடு கைப்பற்றி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதுமட்டுமில்லாமல், அதிமுகவை அடியோடு கைப்பற்றி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் எடப்பாடி தரப்பிடம் இருக்க, ஓபிஎஸ் எடுத்த அதிரடி சந்திப்பு தான் இது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கும் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை தன் பக்கம் ஒன்றிணைத்து பலம் காட்ட நினைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக பிளவுபடக் கூடாது என்று ஆரம்பத்தில் கூறிக்கொண்டிருந்த ஓபிஎஸ், தற்போது களத்தில் குதித்துள்ளது எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க..உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த மாதம் ரூ.436 எடுக்கப்படும்.. ஏன், எதற்கு தெரியுமா? முழு விபரம்
இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்