அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை பல்வேறு இடங்களில் நிறைவு பெற்றது.
கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை பல்வேறு இடங்களில் நிறைவு பெற்றது. ஆனால், கரூர் மாநகராட்சியை உட்பட்ட லாரிமேடு பகுதியில் அமைந்துள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கிய சோதனையானது விடிய விடிய நடைபெற்று இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
undefined
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான முக்கிய புள்ளி.. வசமாக சிக்கிய மைதிலி - ஐடி சோதனையில் பரபரப்பு
இந்நிலையில், வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து இரண்டு அட்டை பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் எடுத்து சென்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் புறப்பட்டனர். அதிகாரிகள், பெட்டியில் எடுத்து செல்லப்பட்டது சொத்து ஆவணங்களா என கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க;- அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் பண்ணை வீட்டில் ஐடி அதிகாரிகள் ரெய்டு
இதேபோல, கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவகத்தில் நேற்று தொடங்கிய சோதனையானது இன்று காலை நிறைவடைந்தது. சோதனை நிறைவு பெற்றதைத அடுத்த கொங்கு மெஸ் உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்துள்ளனர்.