25 ஏக்கர் பரப்பில் சென்னையில் உலகத்தரத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு 5 ஆயிரம் நபர்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்படும் என கூறினார்.
கருணாநிதி நுற்றாண்டு விழா
சென்னை கலைவாணர் அரங்கில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நுற்றாண்டு விழாவுக்கான இலச்சினை வெளியீட்டு விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று இலச்சினையை வெளியிட்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், சிறப்பு விருந்தினராக வந்திருக்கக்கூடிய , முன்னாள் மேற்கு வங்க கவர்னராக இருந்த போது, எந்த ஃபைலில் கையெழுத்து போடாமல் வைத்திருக்காமல், ஃபைல் வந்த உடனே கையெழுத்து போட்டு , சர்க்காருக்கு அனுப்பி, சர்காருக்கு எந்த தலைவலியையும் ஏற்படுத்தாமல், இருந்த மரியாதைக்குரிய கோபால கிருஷ்ண காந்தி அவர்களே வருக என வரவேற்றார்.
கருணாநிதி பெருமையை பேசிக்கொண்டே இருக்கலாம்
தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதி பெருமையை பேசிக்கொண்டே இருக்கலாம், அவரால் நாங்கள் வளர்ந்தோம் என்பதே பெருமை, அவருக்கு நூற்றாண்டு விழா எடுப்பது பெருமை, அதைவிட பெருமை நூற்றாண்டு விழா எடுக்கும் நேரத்தில் ஸ்டாலினை முதலமைச்சராக பொது மக்கள் அமர வைத்தார்களே அது பெருமை, வேற எவனையாவது உட்கார வைத்திருந்தால் சின்ன விளம்பரம் கூட கொடுத்திருக்க மாட்டார்கள். காலம் எந்த நேரத்தில் யாரை வைத்தால் என்ன நடக்கும் என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் பல யோசனைகளை கேட்டு என்னை போல அரசியலில் ஆனா ஆவன்னா கூட தெரியாத என்னை இந்த விழாவுக்கு அழைத்துள்ளதாக கருதுகிறேன்.
கருணாநிதி நிர்வாகத்தை கையாள்வதில் ஒரு ஆர்டிஸ்ட்
நான் தமிழ்நாட்டில் பணியாற்ற துவங்கிய போது கருணாநிதி முதலமைச்சர், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அப்போது 15 வயது, இன்று கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் ஸ்டாலின் முதலமைச்சர் என கூறினார். ஆளுகையில் நிதானம் சமநிலை கையாண்டவர் கருணாநிதி, கருனாநிதிக்கு எப்போ என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என நன்கு தெரியும். அவருக்கு இந்த திறமை எங்கிருந்து வந்தது என தெரியவில்லை, இன்றைய இளம் அமைச்சய்களுக்கும், அவருடைய பேரன் உதயநிதி ஸ்டாலினுக்கும் சொல்ல விரும்புகிறேன். கருணாநிதி நிர்வாகத்தை கையாள்வதில் ஒரு ஆர்டிஸ்ட் என தெரிவித்தார்.
கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம்
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 25 ஏக்கர் பரப்பில் சென்னையில் உலகத்தரத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தெரிவித்தார். 5 ஆயிரம் நபர்கள் அமரும் வகையில், உலகளவில் சிறந்த கூட்டரங்கமாக இது அமையும் என தெரிவித்தார். வர்த்தக மாநாடு , உலக திரைப்பட விழாக்கள் , தொழில் மூதலீடு கூட்டங்கள் அங்கு நடத்தப்படும் என குறிப்பிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் , ஜப்பான் பயணம் செய்த போது இதை முடிவு செய்ததாக கூறினார்.
தமிழகத்தில்தான் தொழில் தொடங்குவோம்
என் தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கும் , கருணாநிதியின் புகழுக்கும் காணிக்கையாக்குகிறேன். நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி , அவர் தொடாத துறைகளே இல்லை , அவர் போட்மழடுத்தந்த பாதையிலே அனைத்து துறைகளும் செயல்படுகிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக தொழில் நிறுவனங்கள் உருவாக காரணம் கருணாநிதி. திராவிட மாடல் அரசு தொழில் புரட்சியை உருவாக்கி வருகிறது. எனது சிங்கப்பூர் , ஜப்பான் பயணத்தில் 3233 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழகம் , திமுக அரசு மீது அவர்கள் நல்ல மரியாதையை வைத்துள்ளனர். இந்தியாவில் முதலீடு செய்வதாக இருந்தால் தமிழகத்தில்தான் தொழில் தொடங்குவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படியுங்கள்