பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை கட்டுப்படுத்த முடியாது.! பாஜக மூத்த நிர்வாகிகளை அலறவிடும் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Jun 2, 2023, 1:10 PM IST

நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன்,எனது அப்பா பெரிய ஆள், எங்க தாத்தா அப்படி இருந்தார், நான் 40 வருடமாக அப்படி இருந்தேன் எனக் கூறுவதை எல்லாம் உங்கள் ஊரில், வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 


டெல்லிக்கு போக சொல்லுங்கள்

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதன் முதல் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒரு சிலர் அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்து கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். இதே போன்று பாஜகவில் மூத்த உறுப்பினாரக இருக்கும் எஸ்.வி.சேகர், அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். இந்தநிலையில் எஸ் வி சேகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பிரச்சனை எழுப்பி வருவது தொடர்பாக கேள்வி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், டெல்லிக்கு போக சொல்லுங்கள் இண்டிகோ விமானத்தில் 6 ஆயிரம் ரூபாய் தான் விமான கட்டணம், யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை என்றால் டெல்லிக்கு போக சொல்லுங்கள்.  

Tap to resize

Latest Videos

மோடி படம் இருப்பதால் தமிழகத்தில் 250 ஆம்புலன்ஸ்கள் முடக்கம்.! திமுக அரசை விளாசும் அண்ணாமலை

பழைய பஞ்சாங்கத்தை வைத்து கட்டுப்படுத்த முடியாது

நான் யாருக்கும் விரோதி இல்லை. என்னை பழைய பஞ்சாங்கத்தை வைத்து கட்டுப்படுத்த நினைத்தால் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். அதில் நான் தெளிவாக உள்ளேன். எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய மனிதன் நான். நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் எனது அப்பா பெரிய ஆள், எங்க தாத்தா அப்படி இருந்தார், நான் 40 வருடமாக அப்படி இருந்தேன் எனக் கூறுவதை எல்லாம் உங்கள் ஊரில், வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.  இது எஸ்வி சேகருக்கு மட்டுமல்ல அவர் கூட இருக்கும் எல்லாருக்கும் தான் சேர்த்து சொல்கிறேன். பழம் பெருமை கதைகள் எல்லாம் பேசி என்னை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்க வேண்டாம்.

பாஜக கட்சி எல்லோருக்கும் சொந்தமான கட்சி

டெல்லிக்கு செல்ல டிக்கெட் வாங்க முடியவில்லை என்னால் நானே டிக்கெட் போட்டு தருகிறேன். டெல்லிக்கு போங்க, பேசுங்கள் என்னை தூக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் பொழுது ஒரு மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சர்வ மத பிரார்த்தனைகளும் நடைபெற்றது. கண்ணில் மஞ்சள் காமாலை என்றால் அப்படித்தான் பார்ப்பார்கள். சில பேருக்கு கட்சிக்குள்ளும் அங்கங்கே உள்ளது.தமிழக பாஜக கட்சி எல்லோருக்கும் சொந்தமான கட்சி என்னுடையது உன்னுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை இல்லை.

அண்ணாமலைக்கு திமிரு ஜாஸ்தி

யாரோ ஒரு சிலர் கட்டுப்படுத்த முடியாது. பாஜக ஒரு காற்றாற்று வெள்ளம். எத்தனை நாட்களுக்கு தான் கத்துவீர்கள், டெல்லிக்கு சென்று சொல்லுங்கள் நான் வேண்டாம் என்று கூறுங்கள். இண்டிகா விமானத்தில் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் உள்ளது. இரவு நேரத்தில் டிக்கெட் எடுத்தால் 4 ஆயிரம் ரூபாய்க்கும் டெல்லி செல்ல முடியும்.  தலைவராக இருந்தாலும் இப்படித்தான் இருப்பான், ஆடு பிடித்திருந்தாலும் இப்படித்தான் இருப்பான்,  அண்ணாமலைக்கு திமிரு ஜாஸ்தி என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

உலகத்தரத்தில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் சென்னையில் அமைக்கப்படும்.! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

click me!