ரிமோட் இன்னும் கையில் தான் உள்ளது, டி வி இன்னும் அங்கு தான் உள்ளது. ஆனால் கரண்ட் , பேட்டரியை உருவ ஒன்றிய சக்தி முயற்சி செய்து வருகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தலை புறக்கணித்தது ஏன்.?
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள். இந்த முடிவை எப்படி எந்த தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்பது போல் என்னையும் கேட்பார்கள். அவர் சொன்ன பதிலை தான் நானும் சொல்லுவேன்.
undefined
நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சர்ந்தப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை இல்லை. நாம் வாதத்தை சந்தர்பத்திற்கேற்ப பேசக்கூடாது என கூறினார். அன்றைய தேதியில் தேவை என்று ராஜாஜி அதை செய்தார், அவர் பணம் வாங்கி திமுகவுக்கு ஓட்டு கேட்கவில்லை. நமக்கு அந்நியமான அரசியல் ஐடியாவை புகுத்துகிறார்கள். நான் உங்கள் அனுமதியுடன் காந்தியின் பேரன் என்று சொல்லிக் கொள்ள முடியும்.
ரிமோட்டை உடைத்தது ஏன்.?
ரிமோட் எடுத்து அடித்தீர்கள் இப்போது அங்கு சேர்ந்து உள்ளீர்கள் என்று சொல்கிறார்கள். ரிமோட் இன்னும் கையில் தான் உள்ளது, டி வி இன்னும் அங்கு தான் உள்ளது. ஆனால் கரண்ட் , பேட்டரியை உருவ ஒன்றிய சக்தி முயற்சி செய்து வருகிறது. நான் இனிமேல் எரிந்தால் என்ன.? வைத்திருந்தால் என்ன.?அந்த மாதிரி செய்கைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போகிவிடும். நான் எப்போதும் ஒரு தனிப்பட்ட மனிதை தாக்கியது இல்லை. மோடி என்பவர் பாரத பிரதமர், அவர் இந்த அரங்கத்திற்குள் வந்தால் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுப்பேன். எதிர்த்து பேசிவிட்டு குனிறீங்களே என்று கேட்டால் அந்த மனிதருக்காக இல்லை. மக்கள் நாயகம் இன்னும் இருக்கிறது என்பதற்காக, ஆனால் தன்மானத்தை விட்டு தலைவணங்க மாட்டேன்.
அரசியல் எதிரி சாதியம்
எதிரியை யார் என்று முடிவு செய்த பிறகு தான் வெற்றி நிச்சயம், ஆனால் அது இல்லாலம் மையம் என தொடங்கியிருக்கீறீங்களே என கேட்டார்கள். அது எப்படி சரியா வரும் என கேட்டார்கள். நான் என் எதிரி யார் என முடிவு செய்துவிட்டேன். என் அரசியல் எதிரி, நினைவு வந்ததில் இருந்து நினைவு போகும் வரை அரசியல் எதிரி சாதியம் தான் என தெரிவித்ததாக கூறினார் தொடர்ந்து பேசிய அவர், அப்படி இருக்கும் நீங்கள் சாதி ரீதியாக கணக்கெடுப்புக்கு எப்படி ஆதரவு தெரிவிக்கிறீங்கள்னு கேட்டாங்கள, அதற்கு நான் சொன்னேன் இன்னும் யார் விலங்கிடப்பட்டு இருக்கிறாங்கன்னு தெரியும் என கூறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ஏப்ரல் 10க்கு பிறகு அதிமுக, திமுக ஆகிய பங்காளி கட்சி ஒன்று சேருவார்கள்.!ஏன் .? அண்ணாமலை புதிய தகவல்