தமிழகத்தை மட்டுமின்றி விருதுநகர் தொகுதி பற்றி கடந்த 30 நாட்களாக நன்றாக ராதிகா படித்துள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் ராதிகா போட்டி
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்களும் களம் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தங்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளது. இதனையடுத்து அந்த கட்சிக்கு விருதுநகர் தொகுதியானது ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் நடிகர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.
undefined
ராதிகாவும், நானும் ஒன்று தான்
இதனை தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா, பிரதமர் மோடி நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறார். ஆனால் எந்த திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார் எனவே இந்த பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான உண்ண உணவு, குடிநீர், இருக்க இருப்பிடம் ஆகியவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சரத்குமாரிடம், தேர்தலில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ராதிகாவிற்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என கேள்விக்குப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் ஒன்றுதான், ராதிகாவிற்கு வாய்ப்பு கொடுத்தாலும் ஒன்றுதான் என தெரிவித்தார். மகளிர் சக்திகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அப்போ கலெக்டர் ஆக்கினேன்.. இப்போ எம்பி ஆக்குவேன்
எப்படி சூர்யவம்சம் படத்தில் படிக்காதவனாகிய நான் (தேவையானியை) கலெக்டர் ஆக்குவேனோ, அதேபோல ராதிகாவை வெற்றி பெற வைத்து எம் பி ஆக்குவதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். ஏற்கனவே 30 நாட்கள் இந்த விருதுநகரை பற்றி மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளையும் ராதிகா நன்றாக படித்துள்ளார். எனவே இந்த தொகுதியை பற்றி நான்கு அறிந்துள்ளார். காமராஜரை போன்று பிரதமர் மோடி ஆட்சி புரிந்து வருகிறார். அந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும். மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தாலும் அதனை மாற்றி மாநில அரசின் திட்டமாக இங்கே செயல்படுத்தி வருகிறார்கள் அந்த பிரம்மையை உடைக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
தேனி தொகுதியை குறிவைத்து களம் இறங்கியது ஏன்.? ஓபிஎஸ் விட்டுக் கொடுத்தாரா.? டிடிவி தினகரன் விளக்கம்