ஏப்ரல் 10க்கு பிறகு அதிமுக, திமுக ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேருவார்கள்.!ஏன் .? அண்ணாமலை புதிய தகவல்

By Ajmal KhanFirst Published Mar 24, 2024, 1:17 PM IST
Highlights

கோவையில் எந்த வேட்பாளருடனும் நான் போட்டி கிடையாது. அவர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம் என தெரிவித்த அண்ணாமலை,  கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை. என்னுடைய வேலை மக்கள் பிரச்சனைகளை சொல்லி வாக்கு கேட்பது என கூறினார்
 

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை மக்களவைத் தொகுதி கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜகவின்  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பங்கேற்றார். இதனை அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், எப்போதும் இல்லாத அளவிற்கு பாஜகவில் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோவையில் என்ன மாற்றம் இருக்கும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் என்கிற அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பாஜகவின் செயல் வீரர்கள் ஆகிய உங்களிடத்தில் தான் வாக்காளர்களை சந்திக்க வேண்டிய பொறுப்பை அளிக்கிறேன் . பாஜக  செயல் வீரர்கள் வேட்பாளர்களாக உணர்ந்து செயல்படுங்கள். கோவையில் பாஜக வெற்றியை சுவைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. 

சண்டை போட வரவில்லை

2002 ஆம் ஆண்டு தான் கோவையை முதன்முதலாக கல்லூரிக்கு வரும்போது பார்த்தேன். ஒவ்வொரு நாளும் கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதேபோல் கோவையைச் சேர்ந்த பெண்மணியை தான் என் மனைவியாகவும் திருமணம் செய்து கொண்டு உள்ளேன் என அண்ணாமலை தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கோவையில் எந்த வேட்பாளருடனும் நான் போட்டி கிடையாது. அவர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை. என்னுடைய வேலை மக்கள் பிரச்சனைகளை சொல்லி வாக்கு கேட்பது என கூறினார். கோவை மக்களுக்கு தெரியும் பாஜக என்ன செய்திருக்கிறது என்று. அண்ணாமலை சொல்ல வேண்டியதில்லை என கூறினார்.

அதிமுக- திமுக ஒன்று சேருவார்கள்

எடப்பாடி பழனிச்சாமி நான் என்ன சொன்னோம் என்று தெரியாமல் பேசுகிறார். நாங்கள் டீ குடித்தாலும் சொந்த காசில் தான் குடிப்போம் என்று கூறினேன். பிரச்சாரத்தில் வெறும் செங்கலை மட்டும் சொல்லி வாக்கு கேட்கிறார்கள். திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார்களா.? என கேள்வி எழுப்பியவர், உதயநிதி ஸ்டாலினின் அறிவு அவ்வளவு தான் என விமர்சித்தார்.

ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு மேல் அதிமுகவும் திமுகவும் ஒன்னா செய்வார்கள். என்னை தோற்கடிக்க ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என கூறினார்.  எனவே அவர்கள் என்ன வேண்டுமானலும் செய்யட்டும். அதுவும் கோவையில் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று நீங்கள் பார்க்க தான் போகீறீர்கள் என அண்ணாமலை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

சூர்யவம்சம் படத்தில் தேவயானியை கலெக்டர் ஆக்கியதை போல் ராதிகாவை எம்பி ஆக்குவேன்- சரத்குமார் அதிரடி

click me!