அனைத்து நியாய விலை கடைகளிலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்; திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்ற அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இதையும் படிங்க;- ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு அரசாணை - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
அதன்படி மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க;- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரேஷன் கடைகளில் தன்னார்வலர்கள்!
இதுதொடர்பாக அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- அனைத்து நியாய விலை கடைகளிலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்; திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம். ஜூலை 17ம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.