அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு பொருந்தாது.! ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Jul 12, 2023, 1:18 PM IST

தமிழகத்தில் எங்கு பார்தாலும் கொலை நடக்கிறது, சாதாரண மக்கள் பாதுகாப்பின்றி இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தால் எந்த பலனும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


ஓபிஎஸ், சசிகலாவிற்கு பொருந்தாது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியை பாதுகாக்க அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

Latest Videos

undefined

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலாவுக்கு பொருந்தாது என தெரிவித்தார். தற்போதி திமுக கூட்டணியில் கடுமையான அதிருப்தி நிலவுவதாக கூறியவர், அடுத்த 9 மாதங்களில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். எனவே தோற்பவர்களுடன் பயணிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் திமுக அணியில் இருப்பவர்கள் எங்கள் அணிக்கு வர வாய்புள்ளது என கூறினார்.

திமுக எம்எல்ஏக்கே பாதுகாப்பு இல்லை

தமிழகம் அதிமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்ததாகவும், தற்போது அமளி பூங்காவாக உள்ளதாக கூறினார்.  தமிழகத்தில், பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளதாக தெரிவித்தவர். கடலூரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ள நிலையில் சாதாரண குடிமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், மூலகொத்தளம் குடிசை மாற்று வாரிய கட்டிடம், அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கட்டியதை போல சித்தரித்துள்ளதாக விமர்சித்தார். மூலகொத்தளம் குடிசை மாற்று வாரிய கட்டிடம் அப்பகுதியில் உள்ள ராமதாஸ் நகர் மக்களுக்காக தான் கட்டப்பட்டதாகவும், அவர்களுக்கு அந்த வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்

காலையில் காபி அருந்துவது தான் வழக்கம்.! திராவிட மாடல் அரசில் எழுந்ததும் மது குடிக்கனுமா.? ஆர்.பி.உதயகுமார்

click me!