வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அளித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக காடுவெட்டி குருவின் மகன் கனரலசரன் தெரிவித்துள்ளார்
அதிமுகவிற்கு ஆதரவு
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாவட்டங்களில் வன்னியர்களின் வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பாமக மூத்த தலைவரான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் பாமகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
undefined
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு
இது தொடர்பாக அறிக்க வெளியிட்ட மாவீரன் மஞ்சள் படை அமைப்பை சேர்ந்த காடுவெட்டி ஜெ குருவின் மகன் கனலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் உயிரினும் மேலான வன்னிய சொந்தங்களுக்கும் மாவீரன் காடு வெட்டியார் அவர்களின் தீவிர விசுவாசிகளுக்கும், மாவீரன் மஞ்சள் படை தொண்டர்களுக்கும் வணக்கம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மாவீரன் மஞ்சள் படையின் நிலைப்பாடு குறித்து எனது தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் நலன் கருதியும் வன்னிய சமூகத்தின் வளர்ச்சி கருதியும்
சென்ற சட்டமன்றத் தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிய மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மாவீரன் மஞ்சள் படைத் தொண்டர்களும் மாவீரன் காடுவெட்டியார் அவர்களின் தீவிர விசுவாசிகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி தேர்தல் பணியாற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.