மூன்றாவது முறையாக அதிமுக வெற்றி பெற்று சரித்திர சாதனை அமைந்திருக்கும் இது தவறிவிட்டது. 2021 ஆம் ஆண்டு விட்டதை 2026 ஆம் ஆண்டு கட்டாய பிடிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
மீண்டும் அதிமுக ஆட்சி
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் பல இடங்களில் தீவிரமாக பிரச்சாரம் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக வேட்பாளர் ஆதரித்தும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் திமுகவின் ஆட்சியில் கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசியவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் மக்களிடம் பேசிய அவர்,2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினேன். இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எத்தனையோ பேர் பல வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாஜக நிர்பந்தம்
மூன்றாவது முறையாக அதிமுக வெற்றி பெற்றிருந்தால் சரித்திர சாதனையாக அமைந்திருக்கும். எனவே இப்போதும் ஒன்றும் பிரச்சனை இல்லை. 2021-ல் வர வேண்டிய வெற்றி 2026-ல் கட்டாயம் கிடைக்கும் என தெரிவித்தார்.அது சரித்திர வெற்றியாக அமையும் அது யாருக்கும் கவலை வேண்டாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.அதிமுக கூட்டணி சேருவதற்காக அந்த கட்சி அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் பாஜக சார்பாக அவ்வளவு நிர்பந்தம் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஜெயலலிதாவை போல் நானும் முடிவெடுத்ததாக தெரிவித்தார்.இந்த முறை கூட்டணி அதிமுகவுடன் தான் இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என உறுதியாக எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லாமல் இந்த மக்களுக்காக இந்த முடிவை கூட்டணி முடிவு எடுத்ததாக தெரிவித்தார்.
வங்கி கணக்கு முடக்கம்
எத்தனையோ நிர்பந்தங்கள் எங்களுடைய வங்கிக் கணக்கையும் முடக்கினார்கள். எங்களை பயமுறுத்தினார்கள் இந்த பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்.எத்தனையோ சோதனைகள் எத்தனையோ நெருக்கடிகளை கண்டு பயப்படுவதற்கு நாங்கள் கேப்டனும் இல்லை அவரது மனைவி பிரேமலதாவும் இல்லை என தெரிவித்தார்.ஊழலுக்கு அப்பாற்பட்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக இந்த தொகுதிக்கு நல்லதம்பி கடமையாற்றுவார் என தெரிவித்தார்.எனவே நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் இருவரும் சேர்ந்து நிதி ஒதுக்கி இந்த தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவார்கள் என பிரேமலதா தெரிவித்தார்.