பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நா வடக்கத்துடன் பேச வேண்டும், அண்ணாமலையின் பேச்சு அவரது அரசியல் முதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை காட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்
இந்தியா வளர்கிறதா..?
சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரிட்டனை தாண்டி 5வது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறப்போகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தியா ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரு நாடு வளர்கிறது என்றால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணி மிச்சமாக வேண்டும். ஆனால் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமாக கொண்டிருக்கும் நாடு உலகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என கதை விடுவது இந்த நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் என தெரிவித்தார். இலவசங்களை குறைக்க வேண்டுமென வலியுறுத்தும் மத்திய அரசை, தமிழக நிதியமைச்சர் கேள்வி கேட்கிறார். இலவசங்களை குறைத்து கார்பரேட்களை கொழிக்க வைக்கும் மத்திய அரசு சாதாரண மக்களுக்கு எதுவும் தரக்கூடாது என கூறுவது குறித்து கேட்டால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது.
தடையை மீறி விநாயகர் ஊர்வலம்… போலீஸாருடன் தகராறு…இந்து முன்னணியை சேர்ந்த 27 பேர் கைது!!
அண்ணாமலைக்கு நா வடக்கம் வேண்டும்
அண்ணாமலை நா வடக்கத்துடன் பேச வேண்டும். அண்ணாமலையின் பேச்சு அவரது அரசியல் முதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை காட்டுவதாக கூறினார். அண்ணாமலை திமுக நிதியமைச்சரை விமரிசிப்பது அநாகரிகமாக உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு இலவசங்கள் தேவைப்படுகிறது. இந்த திட்டங்கள் பறிபோனால் பட்டினிசாவு நிலை ஏற்படும். பட்டினி சாவுகளை தடுக்கும் நோக்கில் இலவசங்கள் தேவை என வலியுறுத்தும் தமிழக நிதி அமைச்சருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பத்தே முக்கால் லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணும் மோடி இலவசங்கள் எதற்கு என்கிறார். அதனால் தான் உலகிலயே 3வது பணக்காரராக இந்தியர் இருக்கிறார். அதானி உலக பணக்காரராக வந்திருப்பது என்பதே மோடி அரசின் சாதனை. ரேஷன் கடையில் பிரதமர் படத்தை வைப்பது அவசியம் அற்றது. மோடி என்பது ஒரு வழி பாதை. அவர் பேசுவது மட்டுமே உலகம் கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதை அவர் கேட்க மாட்டார். மோடி பேசிக்கொண்டே இருப்பார். நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்