தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டேன்.. இனி தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்.. EVKS இளங்கோவன்..!

By vinoth kumarFirst Published Sep 5, 2022, 7:13 AM IST
Highlights

தமிழகத்தில் அண்ணாமலை வாலாட்ட வேண்டும் என்று நினைத்தால் வாலை நறுக்கப்படுவதோடு உதைப்படுவார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

எந்த தேர்தலிலும் இனி போட்டியிட மாட்டேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை தொடங்க உள்ளார். இதுகுறித்து ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க;- இது நாகலாந்து இல்ல தமிழ்நாடு.. வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது.. ஆளுநரை சரமாரியாக எச்சரித்து EVKS.

இந்த கூட்டத்தில் பேசிய  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்;- தேர்தலில் 5 முறை நான் போட்டியிட்டு 2 முறைதான் வெற்றி பெற்றிருக்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊரில் உள்ள அனைவரும் வெற்றி பெற்றபோது, திருஷ்டி பரிகாரமாக நான் மட்டும் தோற்றேன். தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன். அதற்கு தோல்வி ஒரு காரணமில்லை. ஈரோடு, கோபி, கிருஷ்ணகிரியில் தோல்வி அடைந்து இருக்கிறேன். 

எனவே தோல்வி என்பது எனக்கு பழக்கப்பட்டது. எனக்கென்று தனிப்பட்ட மரியாதை இல்லை. கட்சியை சார்ந்துதான் வாக்குகள் கிடைக்கும். நான் தனியாக நின்றால் டெபாசிட்கூட பெறமுடியாது என்று தெரியும். தமிழக நிதி அமைச்சரை காலடிக்கு சமம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். மேலும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பிக்க மாட்டோம் என்றும் கூறினார். காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இருந்த தமிழகத்தில் அண்ணாமலை வால் ஆட்டினால் நறுக்கப்படும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசமாக பேசியுள்ளார். 

இதையும் படிங்க;-  மோடியை தில்லாக எதிர்க்கக்கூடிய தைரியம் ஸ்டாலினுக்கு மட்டும்தான் இருக்கு.. சரவெடியாய் வெடிக்கும் EVKS..!

click me!