மிகப்பெரிய சதி நடந்து இருக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறையால் எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல்..!

By vinoth kumar  |  First Published Sep 5, 2022, 6:42 AM IST

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் அரசின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் அரசின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து, எஸ். பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஓபிஎஸ், எத்தனை முறை கோர்ட்டுக்கு போனாலும் வேலைக்கு ஆகாது.. எடப்பாடியார் வீட்டு வாசலில் மாஸ் காட்டிய SP வேலுமணி

இந்நிலையில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி), தனக்கு எதிராக பதிவு செய்த 2 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையும் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்துள்ளார். சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்த பணிகளை செய்வதற்காக செந்தில் அண்ட் கோ என்ற பெயரில் தன் குடும்பத்தினருடன் இணைந்து எஸ்பி.வேலுமணி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அந்நிறுவனத்துக்கு பதவியை பயன்படுத்தி இவர் டெண்டர்களை முறைகேடாக வழங்கியுள்ளார். வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- திமுக ஆட்சிக்கு முடிவுக்கற்ற ஒரே தலைவர் இபிஎஸ் தான்.. எஸ்.பி.வேலுமணி அதிரடி சரவெடி..!

இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இது முழுக்க முழுக்க விதிமீறலாகும். ஏராளமான அரசு பணத்தை அபகரிக்க இவர் மிகப்பெரிய சதி செய்துள்ளார். அதனால் வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

click me!