தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..!

By vinoth kumar  |  First Published Sep 5, 2022, 8:30 AM IST

தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமண உதவித்திட்டம், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டமாக மாற்றப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில், பள்ளி படிப்புக்கு பின் உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

உயர்கல்வி செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்பட 3 புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். 

தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமண உதவித்திட்டம், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டமாக மாற்றப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில், பள்ளி படிப்புக்கு பின் உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு புதுமைப் பெண் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தில்  மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட உள்ளது. இதற்காக நடப்பாண்டில் மட்டும் 698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. 

ஆசிரியர் தினமான இன்று புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்படுகிறது. திட்டத்துக்கான தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இணைந்து புதுமைப் பெண் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார். பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினுடன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கெஜ்ரிவால் பார்வையிட உள்ளார். 

click me!