திமுகவே ஒரு புளுகு மூட்டை.! உதயநிதியோடு சேர்ந்து நாங்கள் ஏன் பிரதமர் வீட்டிற்கு செல்லனும்- சீறும் ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Aug 22, 2023, 1:33 PM IST

நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்திற்கு போகும் போது அவர் கிளிசரின் எடுத்து போக மறந்து விட்டதால் கண்ணீர் வராமலே கண்ணீர் வந்தது போல் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டினார்.


பாதுகாப்பு கொடுக்காத போலீஸ்

மதுரை மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தராத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டும் அலட்சியமாக செயல்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாட்டிற்கு புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்க படும் என நீதிமன்றத்தில் காவல்துறை கூறியபடி போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் பெயரளவுக்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

Tap to resize

Latest Videos

நெருக்கடி கொடுத்த ஸ்டாலின்

எனவே நீதிமன்றத்தில் கூனயறியபடி சரிவர செயல்படாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாகவும் டிஜிபி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் மூலமாக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மதுரையில் நேற்று முன் தினம்  நடைபெற்ற அதிமுக மாநாட்டில் சுமார் 20 லட்சம் பேர் வரை பங்கேற்றதாக கூறினார். அதிமுக மாநாட்டின் கூட்டத்தை கண்டு பொறுக்க முடியாத முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மாநாட்டிற்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.

ஸ்டாலினை போல் நடிக்கும் உதயநிதி

முதலமைச்சர் மு க ஸ்டாலினே பெரிய நடிகர் என்றும் தினம் ஒரு போட்டோ சூட் நடத்தி வரும் நிலையில், அவரது வழியில் அவரது மகனான உதயநிதி ஸ்டாலினும் நடித்து வருவதாக விமர்சித்தார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி ஆட்சி பொறுப்பேற்று விட்டு இரண்டரை ஆண்டு காலம் ஒன்றும் செய்யாமல் தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுவதாகவும் மற்றும் சாட்டினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் மூலம் நீட் தேர்வு ரத்து செய்வோம் என திமுக நாடகம் ஆடுவதாகவும் இது தேர்தலுக்கான நாடகம் எனவும் விமர்சித்தார். 

திமுக ஒரு புளுகு மூட்டை

பிரதமர் வீட்டிற்கு முன் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து பேசும் போது நீட் விலக்கு தொடர்பாக பேசாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.  திமுக வே ஒரு புளுகு மூட்டை அவர்களுடன் சேர்ந்து நாங்கள் ஏன் பிரதமர் வீட்டுக்கு செல்ல வேண்டும் நீட்டிற்கு கடந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி புரிந்த போது திமுகவும் சேர்ந்து தான் அதற்கு விதை போட்டதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்

அதிமுக மதுரை மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணானது ஏன்.? காரணம் யார்.? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

click me!