CM Stalin: உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்… ஸ்டாலினுக்கு வந்த சிக்கல்… அதிர்ந்த திமுகவினர்..!

Published : Dec 06, 2021, 09:02 AM ISTUpdated : Dec 06, 2021, 09:04 AM IST
CM Stalin: உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்… ஸ்டாலினுக்கு வந்த சிக்கல்… அதிர்ந்த திமுகவினர்..!

சுருக்கம்

நகராட்சி தேர்தல், மழை, வெள்ள பாதிப்பில் மக்களின் மனநிலை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி உளவுத்துறை அளித்திருக்கும் ரிப்போர்ட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ந்து போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை:  நகராட்சி தேர்தல், மழை, வெள்ள பாதிப்பில் மக்களின் மனநிலை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி உளவுத்துறை அளித்திருக்கும் ரிப்போர்ட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ந்து போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலமைச்சராக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று தற்போது நாட்கள் நகர்ந்து கொண்டே வருகின்றன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம், விலைவாசி உயர்வு, தற்போது மழை, வெள்ள பாதிப்பு, எதிர்க்கட்சிகளின் நெருக்கடி என தொடர்ந்து சுழன்று வரும் திமுக அரசு தொடர்ந்து பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.

தற்போது டிசம்பர் மாத இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தியாக வேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் முதல் கட்டமாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இனி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் பாக்கி உள்ளது. கையோடு இந்த தேர்தலை நடத்தினால் வெற்றிகளை அள்ளலாம் என்று திமுக தலைமை நினைத்தது. இது தொடர்பாக உளவுத்துறை தந்த ரிப்போர்ட்டும் சாதகமாக இருந்ததால் திமுக தரப்பு குஷியாக இருந்தது.

ஆனால் மழை, பெருவெள்ளம், மக்கள் பாதிப்பு என அரசின் கவனம் முழுக்க திரும்பியதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. மக்கள் பல இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்க, மழை இன்னமும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்களின் மனோநிலை வேறாக இருக்கிறது.

வரலாறு காணாத வகையில் தமிழக மக்களை போட்டு தாக்கி இருக்கும் வடகிழக்கு பருவமழையால் ஏராளமான பாதிப்பும், சேதமும் ஏற்பட்டுள்ளதைக கண்கூடாக காண முடிகிறது. அரசிடம் உதவியை எதிர்பார்த்து பாதிக்கப்பட்ட மக்களும், விவசாயிகளும் காத்து கிடக்கின்றனர்.

முதல்வரும், அமைச்சர்கள் குழுவினரும் தமிழகம் முழுக்க மாவட்டங்கள் வாரியாக சென்று மக்களை சந்தித்து நிவாரண பணிகளை முடுக்கிவிட்ட வண்ணம் உள்ளனர். அத்தியாவசியமான உணவு, உடை போன்றவை  கிடைத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணங்கள் எல்லாம் அரசு எப்போது நிவாரண தொகை தரும் என்றே இருக்கிறது.

அதே நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க தொகை இல்லாதது மக்களை வெகுவாய் அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசின் நிதியை வேண்டி தமிழகம் காத்திருப்பதால் எப்போது மக்களுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலை இருக்கிறது.

இப்படி கொரோனா சூழல், மழை, வெள்ள பாதிப்பு என முதல்வர் ஸ்டாலினும், அரசு இயந்திரமும் சுழன்று கொண்டு இருக்கும் சூழலில் உளவுத்துறை முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை முதல்வரிடம் அளித்துள்ளதாம்.

அதில் முக்கியமான சில விஷயங்களை பற்றி தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறதாம். கொரோனா பரவல் குறைந்திருந்த போதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் இருக்கின்றனர் இப்போது மழை, பெரு வெள்ளம் போட்டு தாக்க.. ஒட்டுமொத்தமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனராம்.

ஆகையால் டிசம்பர் மாதம் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களின் மனநிலை பிரதிபலிக்கும் என்று உளவுத்துறை கூறி உள்ளதாம். அதை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் தீவிர யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.  உளவுத்துறை அறிக்கை பற்றி கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தீவிர யோசிக்க ஆரம்பித்துவிட்டனராம்.

மக்களுக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்குவது, வெள்ள நிவாரண பணிகளை முடுக்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவது, உள்ளாட்சி தேர்தல் என முக்கோண பிரச்னைகளை ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது எதிர்கொண்டு உள்ளது.

குறிப்பாக வெள்ள நிவாரணத்தை எந்தளவுக்கு விரைவாக மக்களிடம் நேரிடையாக கொண்டு சேர்க்க வேண்டுமோ அந்தளவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு அதற்கான பணிகளை வேகப்படுத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளதாம். ஆகையால் இந்த ஒரு மாதம் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால்கள் நிறைந்த மாதமாக தான் இருக்கும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்…!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜக அரசுக்கு ஆதரவு... என் முடிவில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் பதிலடி..!
அண்ணாமலைக்கு சீட் இல்லை... மோடி எடுத்த முக்கிய முடிவு..! பாஜகவின் இந்திய முகமாக மாறும் தமிழர்..!