100 கோடி தடுப்பூசி செலுத்தியது மட்டுமல்ல, 100 நாடுகளுக்கும் கொடுத்து உதவிய நாடு இந்தியா.. தெறிக்கவிட்ட ஆளுநர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2021, 4:02 PM IST
Highlights

கொரோனா என்ற வேதனையை 100 கோடி தடுப்பூசிகள் வென்ற சாதனையை நாள் இது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியுமா என்று கேட்ட மற்ற நாடுகளுக்கு இன்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி முடியும் என்று நிரூபித்து சாதனை படைத்த நாடு நம் இந்தியா.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த பெரும் சாதனையைப் படைக்க நம் இந்திய திருநாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெலுங்கானா ஆளுநரும் மற்றும்  புதுச்சேரி மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம், 

கொரோனா என்ற வேதனையை 100 கோடி தடுப்பூசிகள் வென்ற சாதனையை நாள் இது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியுமா என்று கேட்ட மற்ற நாடுகளுக்கு இன்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி முடியும் என்று நிரூபித்து சாதனை படைத்த நாடு நம் இந்தியா.

இதையும் படியுங்கள்: ஒட்டுமொத்த உலக நாடுகளையும் வாயடைக்க செய்த இந்தியா.. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த பெரும் சாதனையைப் படைக்க நம் இந்திய திருநாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

இதையும் படியுங்கள்: அதிமுக தொண்டர்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி. காலையிலேயே பரபரப்பு.!!

மேலும் நம் நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, அதை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி மற்றும் 100 நாடுகளுக்கும் கொடுத்து உதவி சாதனை படைத்த நாடு நம் இந்தியா. இந்த மாபெரும் சாதனையை படைக்க கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த மருத்துவ வல்லுனர்கள், செயலாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.

click me!