
சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நேற்று அதிரடியாக ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார். உள்ளாட்சி தேர்தலில் நடந்த குளறுபடிகள் குறித்தும், நகராட்சி மன்ற தேர்தலில் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார், அதேபோல சசிகலாவுக்கம் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அவர், சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில், இன்று காலை திடீரென எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு குடலிறக்க பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அது தொடர்பாக இன்று காலை 6:30 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்ஜிஎம் மருத்துவமனையில் ரூம் நம்பர் 11ம் அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் உடலுறுப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதை அறியும் எண்டோஸ்கோப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.