கீரியும் பாம்புமாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள்.! சட்டப்பேரவையில் ஒன்றிணைந்த ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிகள்

By Ajmal Khan  |  First Published Apr 12, 2023, 12:05 PM IST

உசிலம்பட்டி தொகுதியில் 58 கிராம கால்வாயை சிமெண்ட் கால்வாயாக கட்டித்தர ஓ.பி.எஸ் அணி சட்டமன்ற உறுப்பினர்களும், இ.பி.எஸ் அணியின் சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 


சட்டப்பேரவையில் கேள்வி நேரம்

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இருக்கை பிரச்சனை தொடர்பாகவும், அதிமுக சார்பாக ஓபிஎஸ் பேச அழைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து மோதிக்கொண்ட னர். இந்தநிலையில் மக்கள் பிரச்சனைக்கா ஒன்றிணைந்து கேள்வி கேட்டது அனைவரையும் வியக்கவைத்தது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏவும் ஓ.பி.எஸ்யின்  ஆதரவாளருமான ஐயப்பன், உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாயில், புதூர் முதல் புள்ளிமான் கொம்பு வரை சிமெண்ட் கால்வாயாக கட்டித்தர அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார்.

Latest Videos

undefined

சட்டப்பேரவைக்கு வந்த கிருத்திகா, சபரீசன்.! உதயநிதி மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் அப்பாவு

58 கிராம கால்வாய் திட்டம்

அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உசிலம்பட்டி வறட்சியான இடம் என்பதால் 1996 ஆம் ஆண்டு கருணாநிதியால் 58 கிராம கால்வாய் திட்டம் 33.61 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை சிமெண்ட் கால்வாயாக மாற்றினால் நீரின் ஓதம் மற்ற இடங்களுக்கு பரவாது அதனால் கால்வாய் பழுதுள்ள இடங்களில் மட்டும் சிமெண்ட் கால்வாய் அமைத்து சீர் செய்யப்படும் என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் திண்டுக்கல் சினிவாசன், உசிலம்பட்டி ஐயப்பனின் கேள்வி மக்களுக்கானது. சிமெண்ட் கால்வாய் அமைக்காதது மக்களை பாதித்து வருகிறது.  58 கிராம கால்வாய் திட்டம் கருணாநிதியால் துவங்கப்பட்டாலும், அதிமுக ஆட்சியில் தான் முடிக்கப்பட்டது. இதில் எங்கள் சாதனையும் உள்ளது என கூறினார்.  

ஒன்றினைந்த அதிமுக எம்எல்ஏக்கள்

அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 58 கிராம கால்வாய் திட்டம் கருணாநிதியால் துவங்கப்பட்டாலும், பலமுறை திட்ட மதிப்பீடு மாற்றப்பட்டு 16 வருடங்களுக்கு பிறகு 90 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டது.  இந்த கால்வாய்க்கு வைகை அணை நிரம்பும் போதும் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பினால் தான் தண்ணீர் திறக்கும் வகையில் அரசாணை உள்ளது. மிக பெரிய பேய் மழை பெய்தால் தான் வைகை அணையும் ராமநாதபுரம் பெரிய கண்மாயும் நிரம்பும். அதனால் அந்த அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என கோரினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், இந்த கால்வாய் கருணாநிதியின் கனவு திட்டம். அதனை கண் போல காப்போம் என பதிலளித்தார். 

இதையும் படியுங்கள்

பொதுச்செயலாளராக எடப்பாடி பதவியேற்றது செல்லுமா.? 10 நாட்களுக்குள் முடிவு..! தேர்தல் ஆணையம் தகவல்

click me!