பொதுச்செயலாளராக எடப்பாடி பதவியேற்றது செல்லுமா.? 10 நாட்களுக்குள் முடிவு சொல்லுங்க- நீதிமன்றம் அதிரடி

By Ajmal Khan  |  First Published Apr 12, 2023, 11:26 AM IST

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதிவி நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 10 நாட்களுக்குள் முடிவு அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இந்தநிலையில் அதிமுகவில் இருந்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல் ஆணையம் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருந்தது. இதன் காரணமாக தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைக்க ஓ.பன்னீர் செல்வத்தின் கையெழுத்தும் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

Latest Videos

undefined

ஓபிஎஸ், டிடிவி அணியின் முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்கிய எடப்பாடி..! உற்சாகத்தில் அதிமுக

10 நாட்களில் முடிவு

இதானல் பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட  திருத்தப்பட்ட அ.தி.மு.க சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும் வகையில்,  கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் பிரதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் வழக்கை விசாரிக்க கூடாது என ஓபிஎஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர்,  "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது எனவே இந்த கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க  வேண்டும் என கோரினார். 

அதிமுக வழக்கு- 10 நாளில் முடிவு

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஏற்கனவே பல முறை இதுபோன்ற பதிலையே தேர்தல் ஆணையம் கூறி வருகிறது, கடந்த ஜூலை 2022 முதல் இதனையே கூறுகின்றனர், ஆனால் முடிவெடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உத்தரவு பிறப்பித்த  நீதிபதி  புருசந்திரா குமார் கவுரவ், ஏற்கனவே இவர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 10 நாள் அவகாசம் வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில் அந்த அவகாசத்தை வழங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்

இதையும் படியுங்கள்

சட்டப்பேரவைக்கு வந்த கிருத்திகா, சபரீசன்.! உதயநிதி மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் அப்பாவு

click me!