உதயநிதியை வரவேற்ற அதிமுக கொடிகள்..? கோட்டை விட்ட முத்துராமலிங்கம்..! கெத்து காட்டிய முனுசாமி...!

By Ajmal KhanFirst Published Sep 15, 2022, 6:11 PM IST
Highlights

திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக பரமக்குடி பகுதிக்கு வந்த உதயநிதிக்கு வரவேற்க திமுக கொடியில்லாமல் அதிமுக கொடியே அதிகளவு இருந்தது தொண்டர்களிடம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 
 

திமுக உட்கட்சி மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஏற்பட்ட மோதலால் பல பிரிவுகளாக அதிமுகவினர் பிரிந்து உள்ளனர். இதனால்  அடிமட்ட தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்களை பார்த்து திமுகவினர் சிரித்து வந்த நிலையில், தற்போது திமுகவில் பல்வேறு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக தொண்டர்கள் பரிதவித்து வருகின்றனர். இதனை அதிமுகவினர் தற்போது கண்டு ரசித்து வருகின்றனர். ராமாநாதபுரம், மதுரை, தேனி  என தென் மாவட்டங்களில் உட்கட்சி தேர்தலில் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பல்வேறு இடங்களில் பலவீனம் அடைந்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் கட்சி நிர்வாகிகளிடம் பதவிக்கு பணம் பெற்றுக் கொண்டு ஆட்கள் நியமனம் செய்வதாக அறிவாலயத்திற்கு புகாரும் அளித்துள்ளனர். 

ஏமாற்றத்தில் திமுக நிர்வாகிகள்

இதனால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோரை பார்க்க பல முறை சென்னை சென்றும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்து வருகின்றனர். மறைந்த திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது வட்டச் செயலாளர் முதல் எளிதில் அவரை தொடர்பு கொண்டு கட்சி பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கவும், அதற்கு அவர் உரிய ஆலோசனைகளை வழங்கி  அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய வகையில் செயல்பட்டதாக உடன்பிறப்புகள் பதெரிவிக்கின்றனர். ஆனால் தற்போதைய திமுக தலைவரான மு க ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து வரக்கூடிய புகார்களை இரண்டாம் கட்ட தலைவர்களிடம் கொடுத்து பிரச்சனையை தீர்க்க சொல்வதாகவும் அவர்கள் அவர்களது விருப்பப்படி செயல்படுவதால் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேலும் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

உதயநிதியை வரவேற்ற அதிமுக கொடிகள்

இப்படி திரைமறைவாக நடைபெற்ற உட்கட்சி மோதல் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வந்த போது வெட்டவெளிச்சமாக மாறிவிட்டதாக ராமநாதபுரம் மாவட்ட உடன் பிறப்புகள் தெரிவிக்கின்றனர். பரமக்குடியில் கடந்த 11ம் தேதி நடந்த இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உதயநிதி ஸ்டாலின் பரமக்குடிக்கு வந்துள்ளார். அப்போது திமுக கொடிகள் உதயநிதியை வரவேற்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதி முழுவதும் அதிமுக கொடிகள் தான் அதிகளவு இருந்துள்ளது. மேலும் திமுக மாவட்ட பொறுப்பாளரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கீழ்மட்ட நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத நிலையில் ஏற்கனவே அதிருப்தி இருந்தவர்கள்  சரிவர கட்சி பணி ஆற்றவில்லை என கூறப்படுகிறது.  மேலும் பரமக்குடியைச் சேர்ந்த திமுக மூத்த நிர்வாகிகள் ஒருவரான சன் சம்பத் என்ற நபருக்கு தேர்தலில் சீட்டு வாங்கி தருவதாக தெரிவித்த முத்துராமலிங்கம் கடைசி நேரத்தில் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. 

எனது அரசியல் பயணம் எப்படி இருக்கப்போகிறது...? பண்ருட்டி ராமசந்திரனை சந்தித்த பிறகு ஓபிஎஸ் பரபரப்பு தகவல்


கூட்டத்தில் சிக்கிய உதயநிதி

இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வந்தபோது தனது கீழ்மட்ட நிர்வாகியான சன் சம்பத்திடம் கட்சி கொடிகள் கட்டக்கூடிய பணியை ஒப்படைத்ததாகவும் அந்தப் பணியை அவர் சரிவர செய்யாத நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் முனுசாமி தனது தொகுதியில் தனது செல்வாக்கை காண்பிப்பதற்காக அந்த பகுதி முழுவதுமே அதிமுக கொடியை நாட்டி கெத்து கட்டி உள்ளதாக உடன்பிறப்புகள் தெரிவித்துள்ளனர். இதனால் பரமக்குடி செல்லும் வழியில் திமுக கொடி இல்லாமல் அதிமுக கொடிகள் அணிவகுத்து நிற்க இதனை பார்த்த உதயநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி கூட செலுத்த முடியாத நிலைதான் உதயநிதிக்கு ஏற்பட்டுள்ளது.  உதயநிதி காரில் திமுகவினர் தொங்கி கொண்டும் சென்றுள்ளனர். நினைவிடத்தில் முட்டி மோதி களேபரமும் ஏற்பட்டுள்ளது. நினைவிடத்திற்கு செல்லும் போது கூட்டத்திற்கு இடையில் சிக்கிய தவித்த உதய நிதிஸ்டாலின் ஏண்டா வந்தோம் என்கிற நினைக்கும் அளவிற்கு ஏற்பாடு இருந்ததாக கூறப்படுகிறது.  

'சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்' கொதித்தெழுந்த பாஜக, போலீசிடம் புகார்..கைதாகிறாரா ஆ ராசா..?

மீண்டும் மாவட்ட செயலாளர் வாய்ப்பு கிடைக்குமா..? 

இந்த நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ் ஆர், ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன் ஆகியோரும் கூட்டத்தில் சிக்கி தவித்தனர்.  உதயநிதி வருகையொட்டி கட்சி வேலை பார்க்க முன்வந்த மாவட்ட அமைச்சரின் ஆதரவாளர்களை வேலை பார்க்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் ஓரங்கட்டி விட்டதாகவும் கட்சியின் விசுவாசிகள் புலம்புகின்றனர். திமுக ஆளுங்கட்சியாக இருந்து வரும் நிலையில் கட்சி பணியை சரிவர செய்யாமல் கோட்டை விட்ட காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்  மீது உதயநிதி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுர மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்களிடம் கேட்ட போது உதயநிதி பரமக்குடி வந்தபோது அதிகமான திமுக கொடிகளும் இருந்ததாகவும், யாரோ ஒரு சிலர் தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். மேலும்  ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சிக்குள் எந்தவித மோதலும் இல்லையென்று அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக விளக்கம் அளித்தனர். எதுவாக இருந்தாலும் விரைவில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர் தேர்தலில் முத்துராமலிங்கத்தின் செல்வாக்கு தொருடருமா என்பதற்கு விடை தெரியவரும்.

இதையும் படியுங்கள்

பாதியிலேயே சாப்பாட்டில் கைகழுவிய ஸ்டாலின்.. திட்டத்தை ஆரம்பித்து அவமானப்படுத்தலாமா.? கிழிக்கும் ஜெயக்குமார்.

 

click me!