தமிழர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... வேல்முருகன் அறிவுறுத்தல்!!

By Narendran S  |  First Published Sep 15, 2022, 4:54 PM IST

மோடியும், அமித்ஷாவும் தமிழர்களுக்கு என்றுமே எதிரி தான் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 


மோடியும், அமித்ஷாவும் தமிழர்களுக்கு என்றுமே எதிரி தான் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கலாச்சாரம்,வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: CM வீட்டு முன்னாடியே வந்து சீன் போட்டா இதுதான் கதி...! வாண்டடா வந்த மாட்டிய ABVP-க்கு சரியான ஆப்பு.

Tap to resize

Latest Videos

முன்னதாக இந்தி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியில் அமித்ஷா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், இந்தியாவின் அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒன்றிணைக்கும் என தெரிவித்திருந்தார். அதாவது, இந்தி தான் நாட்டை ஒன்றிணைக்கும் என்பது அமித்ஷாவின் வாதம். மோடி அவ்வப்போது தமிழ் மொழியின் பெருமிதம் பேசுவதும், திருக்குறள் பாடுவதும், நண்பர்கள் போன்று, தமிழர்கள் தோல் மீது கை வைத்து, மெதுவாக தமிழர்களை கழுத்தை இறுக்கி கொள்ளவே;

இதையும் படிங்க: காவிகளில் வால் ஒட்ட நறுக்கப்படும்.. ஹிந்தி இந்தியாவை பிளக்கும்.. அமித்ஷாவை எகிறி அடித்த கி.வீரமணி.

மோடியும், அமித்ஷாவும் தமிழர்களுக்கு என்றுமே எதிரி தான்; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . ஒன்றிய பாஜக அரசின் உள்நோக்கத்தை அமித்ஷாவின் கருத்தில் இருந்து புரிந்துக்கொண்டு, தமிழர்கள் எச்சரிக்கையாக எதிர்க்கொள்ள வேண்டும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!