முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு அங்கிருந்த காவலர்கள் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஏபிவிபி அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு அங்கிருந்த காவலர்கள் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஏபிவிபி அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வன்முறை போராட்டங்களை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்ததுடன், இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார். இது ஏபிவிபி அமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில், பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ,ஏபிவிபி என்றால் மாணவர் அமைப்பு பல பிரச்சனைகளை முன்னெடுத்து பல போராட்டங்களை செய்வது வழக்கம், அவர்கள் கையிலெடுக்கும் பல போராட்டங்கள் வன்முறையில் முடிவதையும் அனைவரும் அறிந்ததே, அதே பாணியில் தஞ்சை மாவட்டத்தில் உயிரிழந்த மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட அந்த அமைப்பினர் முயற்சித்தனர்.
லாவண்யாவின் மரணத்தைப் போன்று இனி எந்த மரணமும் நிகழக்கூடாது, லாவண்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் எப்படி வெளிவந்தனர் என்பதை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மாணவர்கள் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதையும் படியுங்கள்: காவிகளில் வால் ஒட்ட நறுக்கப்படும்.. ஹிந்தி இந்தியாவை பிளக்கும்.. அமித்ஷாவை எகிறி அடித்த கி.வீரமணி.
எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென அவர்கள் முற்றுகை போராட்டத்தில் இறங்கியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது, அங்கு தடுப்பு பணிக்கு வந்த காவலர்களையும் அவர்கள் தாக்கினர், காவலர்களின் உடைகளும் கிழிக்கப்பட்டது, காவல்துறையினரின் வாகனத்தையும் சேதப்படுத்தியதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையடுத்து ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 35 க்கும் மேற்பட்டோர் மீது தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்னறிவிப்பின்றி ஒன்று கூடுதல், கலகம் செய்ய தூண்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எபிவிபி அமைப்பை சேர்ந்த உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சித், உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுவில், சக மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தான் போராடினோம், சகமாணவர்கள் என்ற முறையில் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம்,
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்த தீர்ப்பு.. அதிர்ச்சியில் எடப்பாடி கூடாராம்..!
முதல்வரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது, ஆனால் எந்த உள்நோக்கத்துடனும் வரவில்லை, ஆயுதங்கள் ஏதும் கொண்டு வரவில்லை என அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தனர், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இது போன்ற போராட்டங்களை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது என தெரிவித்ததுடன், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.