இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலங்களும் சொல்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தி.க தலைவர் கி.வீரமணி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலங்களும் சொல்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தி.க தலைவர் கி.வீரமணி பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் இந்தி மொழி நாள் கொண்டாடப்பட்ட நிலையில் இந்தி மொழி நாட்டை ஒருங்கிணைக்கும் என அமித்ஷா கூறியிருந்த நிலையில் கி.வீரமணி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி என்ற கொள்கையில் செயல்பட்டு வருகிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமித்ஷா இதற்கான முயற்சியை முன்னெடுத்த நிலையில் அதற்கு தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த முயற்சி தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: அதிமுகவை தட்றேன் தூக்குறேன்.. கூட்டத்தில் மாஸ் காட்டிய சசி.. 2024க்கு ஸ்கெட்ச் போட்ட சின்னம்மா.
இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலையில் கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாவின் புகழ், சாதனைகள் எப்போதும் தேவைப்படுகிறது என்பதை விட தற்போது அதிகம் தேவைப்படுகிறது என்றார். தற்போது உள்ள திராவிட ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் பேரறிஞர் அண்ணா என்றார்.
இதையும் படியுங்கள்: எடப்பாடியால் கட்சி அழியும்.. அதிமுககாரன் ஓட்டு பாஜகவுக்குதான்.. தலையில் அடித்து அலறும் பண்ருட்டி ராமச்சந்திரன்
திராவிட மண்ணை காவிய மண்ணாக மாற்ற முயற்சிகள் நடந்து வரும் நிலையில் அண்ணாவின் புகைப்படத்தையும் காட்டிலும் அண்ணாவின் கொள்கைகள் தான் இப்போது அதிகம் தேவைப்படுகிறது, இந்தி இந்தியாவை இணைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்கிறதே என்ற அவர், திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் அவர்கள் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், காவிகள் படையெடுத்தால் அதன்மூலம் காளிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.