அதிமுகவை தட்றேன் தூக்குறேன்.. கூட்டத்தில் மாஸ் காட்டிய சசி.. 2024க்கு ஸ்கெட்ச் போட்ட சின்னம்மா.

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2022, 2:57 PM IST
Highlights

2024ம்ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்த விகே சசிகலா அதிமுகவில் அனைவரையும் அரவணைத்து செல்வதுடன் ஒவ்வொரு தொண்டர்களும் தனக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார்.
 

2024ம்ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்த விகே சசிகலா அதிமுகவில் அனைவரையும் அரவணைத்து செல்வதுடன் ஒவ்வொரு தொண்டர்களும் தனக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் புரட்சி பயணம் மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு  வருகை தந்தார். அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது தான் திமுகவின் சாதனையாக உள்ளது என்றார். 

அதிமுகவை மீட்பது தான் எனது முழு பணி என தொண்டர்கள் மத்தியில் பேசி உற்சாகப்படுத்தினார். வரலாறு உள்ள வரை எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகிய மாப்பெரும் தலைவர்களை யாரும் மறக்க முடியாத என்றார்.

இதையும் படியுங்கள்: ஓட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த தமிழக முதல்வர்; மாஸ் திட்டத்தை தொடங்கி மாஸ் காட்டிய ஸ்டாலின்

செய்தியாளர்களிடம் பேசிய விகே சசிகலா

இதையடுத்து 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் திமுக நிறைவேற்றவில்லை என்றார். இதை தொடர்ந்து பேசிய அவர் மின்சார கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய ஒன்று என்றும், 63சதவீதம் பேர் 200யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த கூடியவர்களாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

இதையும் படியுங்கள்: தந்தை பெரியார் உணவகத்தின் மீது தாக்குதல்: மத வெறிபிடித்த இந்து முன்னணிகாரனை விடாதீங்க.. கொதிக்கும் சீமான்.

மேலும் மின் கட்டணம் உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், திமுக புதிய தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் மின் கட்டண உயர்வால் சிறுகுறு தொழில்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் கழக தொண்டர்கள் ஒத்துழைப்புடன் நிச்சயமாக அதிமுகவை மீட்பேன் என்றும், அதிமுகவில் இருந்து எல்லோரையும் சேர்த்து கொள்வதுடன் அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் தனக்கு முக்கியம் என தெரிவித்தார்.

முன்னதாக சசிகலா தொண்டர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் வந்தன, அப்போது தொண்டர்கள் உடனே ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுமாறு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடதக்கது. 

click me!