தந்தை பெரியார் உணவகத்தின் மீது தாக்குதல்: மத வெறிபிடித்த இந்து முன்னணிகாரனை விடாதீங்க.. கொதிக்கும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2022, 2:09 PM IST
Highlights

தந்தை பெரியார்  உணவக ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுத்த இந்துமுன்னணியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற வன்முறை செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

தந்தை பெரியார்  உணவக ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுத்த இந்துமுன்னணியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற வன்முறை செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கோவை காரமடையில் தந்தை பெரியார் உணவகத்தின் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் சீமான் இவ்வாறு கண்டித்துள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் அண்ணா, பெரியார் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் மீது பாஜகவினரின் விமர்சனம் அதிகரித்துள்ளது. ஆங்காங்கு பெரியார் சிலைகள், அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஆட்சிக்கு வந்தது முதல் இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள கண்ணார் பாளையம் பகுதியில் 4 ரோடு பகுதியில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியாரின் பெயரில் உணவகம் ஒன்றை  கேட்டு திறந்தார்.

இது அங்கிருந்த இந்துத்துவா இயக்கங்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெரியார் உணவு விடுதிக்குள் நுழைந்த ஒரு கும்பல் கடை உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அந்த கும்பல் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியது. அதில் ஓட்டல் ஊழியர் அருண் என்பவர் படுகாயம் அடைந்தார். உணவகத்தை அடித்து துவம்சம் செய்த அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானது, அங்கிருந்த  அனைவரும் படுகாயமடைந்தனர், இதனையடுத்து காரமடை காவல் நிலைத்தில் புகார் கொடுக்கப்பட்டது, சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான தகவல் பரவியதும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது.

இதையும் படியுங்கள்: ஓட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த தமிழக முதல்வர்; மாஸ் திட்டத்தை தொடங்கி மாஸ் காட்டிய ஸ்டாலின்

பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட ரவி பாரதி,  சரவணகுமார்,  சுனில், விஜயகுமார், பிரபு , பிரபாகரன் என்ற 6 பேரை காரமடை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,  கலகம் செய்தல், ஆபாசமாக பேசுவது, அத்துமீறி உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். கேதானவர்கள் அனைவரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

இதையும் படியுங்கள்:  கைதாகிறார் சவுக்கு சங்கர்..? மதுரை உயர்நீதிமன்றத்தில் சுற்றி வளைத்த போலீஸ்..

பெரியார் பெயரில் உணவகம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் தொடுத்திட்ட இந்து முன்னணியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவை மாவட்டம், காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் தந்தை பெரியார் எனும் பெயரில் உணவகம் திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியினர், உணவக ஊழியர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து, உணவகத்தை சூறையாடிய செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். மதவெறியோடும், சமூகத்தைத் துண்டாடும் நோக்கோடும் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரின் கோரச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் இதுபோன்ற மதவாத அமைப்புகளின் அடிப்படைவாதச் செயல்பாடுகளையும், வன்முறை வெறியாட்டங்களையும் ஒருநாளும் அனுமதிக்கக்கூடாது. ஆகவே, தந்தை பெரியார் உணவக ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்ட இந்து முன்னணியினர் மீது கடும் சட்ட நடவடிக்கையைப் பாய்ச்ச வேண்டுமெனவும், தனிமனித உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் நடந்தேறும் இதுபோன்ற எதேச்சதிகாரப்போக்குகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
 
 

click me!