பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு.
மாணவச் செல்வங்களே நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். காலையும், மதியமும் உணவளித்து உங்களுடைய மற்ற தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மாணவர்களுடன் உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி அருகில் இருந்த மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டார்.
பின்னர், மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- தமிழ்நாடு இந்தாண்டு வரலாறு காணாத அளவு நெல் மற்றும் தானிய உற்பத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மறுபுறம், யாரும் பசியால் வாடிவிடக்கூடாது என்பதற்காக நெல்பேட்டை சமையற்கூடத்தில் தயார் செய்யப்பட்ட உணவு பிஞ்சுக்குழந்தைகளுக்கு செல்கின்றது. இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை அறிந்து, ஆதிமூலத்திலே தீர்வு காண வேண்டும். அந்த முயற்சியில் ஒருபகுதியாகவே இந்த ஆதிமூலம் பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இதையும் படிங்க;- “சமூக நீதி வரலாற்றில் சாதனை.! முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு !”
பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு. பசியை போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். பசியோடு வரக்கூடிய ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் உணவு வழங்க உள்ளோம். வறுமையினாலோ, சாதியினாலோ கல்வி ஒருவருக்கு தடையாக இருக்கக் கூடாது என பெரியார், அண்ணா, கலைஞர் நினைத்தார்கள். அவர்கள் வழியில் செயல்பட்டு வருகிறேன்.
காலை உணவுத் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டமாக இருக்கும். வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது. மாணவச் செல்வங்களே நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். காலையும், மதியமும் உணவளித்து உங்களுடைய மற்ற தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- #TNBreakfast: மாணவர்களுக்கு அன்பாக உணவு பரிமாறி ஊட்டி விட்டு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்