அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. பாஜகவினரை ரவுண்டி கட்டிய போலீஸ். 5 பேர் கைது

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2022, 1:21 PM IST
Highlights

தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்த வந்த போது அவரது கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர்.

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்த வந்த போது அவரது கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 5 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக தொடர்ந்து திமுக அரசையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல்  அமைச்சர்கள் வரை  அனைவர் மீதும் அடுக்கடுக்கான  ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் அவரின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை, இதனால் திமுக பாஜக இடையே மோதல் நீடித்து வருகிறது. மேலும் இதை அதிகப்படுத்தும் வகையில் மதுரை விமான நிலையத்தில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

இதையும் படியுங்கள்: உணவுத் திருவிழாவில் ”பீப் பிரியாணி”.. சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு திடீர் அனுமதி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது உடல் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தது, பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரான டி.பதுபட்டியில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் வருகை தந்திருந்தார்.

இதையும் படியுங்கள்: சென்னையில் செருப்பில் கடத்தப்பட்ட ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்..சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு?

அதேபோல் அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வர இருப்பதாக தகவல் வெளியானது, ஏராளமான பாஜக தொண்டர்கள் மதுரை விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்தனர்.

அப்போது நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்  தியாகராஜன் இங்கு அரசு சார்பில்  ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது புரோட்டோகால் படி நடக்கிறது, இதில் அரசியல் கட்சிகளுக்கு என்ன வேலை? இதில் அரசியல் கட்சிகளை அனுமதிக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.

அப்படி அஞ்சலிசெலுத்துவது என்றால் பொது மக்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்ததட்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்த பாஜகவினர் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாககூறப்படுகிறது. இதனால் போலீசார் அங்கு இருந்த பாஜக தொண்டர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. 


இதனால் பாஜக தொண்டர்கள் அமைச்சர் பிடிஆர் மீது கோபத்தில் இருந்தனர். பின்னர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரரின் உடலுக்கு அரசு முறைப்படி மரியாதை செலுத்தி விட்டு வெளியில் வந்தார், அப்போது நாங்களும் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என மீண்டும் பாஜகவினர் அவரின் வாகனத்தை வம்படியாக மறைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவரின் கார் மீது செருப்பு வீசினார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர், பின்னர் அமைச்சரின் கார் அங்கிருந்து பத்திரமாக சென்றது. இந்த விவகாரம் தொடர்பாக அவனியாபுரம் மற்றும் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து போராட்டத்தில் யார் யார் ஈடுபட்டனர் என்பது குறித்து விசாரித்து வந்தனர் இந்நிலையில் அதில் 5 பேரை போலீசார் கூது செய்துள்ளனர்.

நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரருக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பாஜகவினர் விதி மீறக்கூடாது என  சுட்டிக்காட்டிய அமைச்சரின் கார் மீது பாஜகவின் செருப்பு வீசி வன்முறையில் ஈடுபட்டிருப்பது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினரின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். 
 

 

 

click me!