பெரியாரை பொறுத்தவரை எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது… அண்ணாமலை கூறுவது என்ன?

By Narendran SFirst Published Aug 12, 2022, 8:11 PM IST
Highlights

எல்லா கருத்தையும், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

எல்லா கருத்தையும், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நிறை இருக்கிறது. குறை இருக்கிறது. பெரியாரை பொறுத்தவரை சில விஷயங்களில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. குறிப்பாக, கடவுளைப் பற்றி பேசியதில் இருந்து, ஒரு சமுதாயத்தை தாக்கி பேசியதில் இருந்து மாறுபடுகிறேன். அதே நேரத்தில், இந்த மண்ணில் பலர் பல கருத்தை பேசியுள்ளனர்.  இந்த மண் அனைவரது கருத்தையும் ஏற்றுள்ளது. வேண்டாத கருத்தை வேண்டாம் என்று தள்ளியிருக்கிறது.

இதையும் படிங்க: ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும் ஆனால் டிஜிபியிடம் இருந்து அது வருவதே இல்லை.. நீதிபதி வேதனை

ஆழ்வார்கள் காலத்தில் இருந்து, நாயன்மார்கள் காலத்தில் இருந்து, திருவள்ளுவர் காலத்தில் இருந்து பல கருத்தை நாம் ஏற்றுள்ளோம். முழுமையாக எல்லா கருத்தையும், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெரியார் சிலை இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆழ்வார்கள் சிலை, நாயன்மார்கள் சிலை இருக்கும். அதற்காக, ஒருவருடைய சிலையை தாக்கி, அந்த சிலையை அவமானப்படுத்தி இந்த கட்சி அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெரியாரை தமிழ்நாட்டில் பலரும் மதிக்கிறார்கள். ஒரு கட்சியின் கொள்கை, சித்தாந்தம் வேறு விதமாக இருக்கலாம். பலர் பெரியாரை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க: இவர்களால் என் உயிருக்கு ஆபத்து… போலீஸ் பாதுகாப்பு வேண்டும்… டிஜிபி அலுவலகத்தில் ஈபிஎஸ் மனு!!

தமிழக மக்களுக்கும், காவல்துறையினருக்கும் நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். ஒருவரை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஒரு மனிதன் எங்கே நின்று கொண்டிருக்கிறாரோ? அங்கேயே நின்று கொள்ளட்டும். எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை கிடையாது. நாம் ஆட்சிக்கு வரும்போது யாருடைய சிலையை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைப்போம். அதற்காக, விவசாய நிகழ்ச்சியை காவிரித் தாய்க்கு செய்யும் மரியாதையை போலீஸ் பாதுகாப்பு போட்டு செய்யும்போது அது காவிரித் தாய்க்கு செய்யும் மரியாதையாக இருக்காது என்று சொன்னேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நம்முடைய ஆரத்தி யாருக்கும் தொந்தரவு அளிக்காமல் போயிடும். நாம் ஒரு சிலைக்கு செல்லும்போது அவர்களை தவறாக பேசுவது நமது கொள்கை கிடையாது. அமைதியான முறையில் செல்வோம் என்று தெரிவித்தார். 

click me!