ஆவின் பால் விலையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். ஆவின் விலை உயர்வு காரணமாக தான் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்துகிறார்கள்.
பாஜக விவசாய அணியின் மாநில செயற்குழு கூட்டம் விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது, 'மின்சார திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பு, ஏற்படுத்தாது. அச்சட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என கூறுவது தவறு.
மின்சார பயன்பாடு குறித்த அளவீடு கணக்கெடுக்கப்படும். யாரும் யாருடன் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ரஜினி ஆளுநரை சந்தித்திருப்பதை வைத்து சிலர் தான் அதை அரசியலாக்குகிறார்கள். ஆவின் பால் விலையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். ஆவின் விலை உயர்வு காரணமாக தான் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்துகிறார்கள். எனவே ஆவின் விலை உயர்வை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !
மது விலக்கு தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் அந்த அந்த மாநிலத்தின் நிலைமையை வைத்து முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மது அதிகப்படியாக விற்கப்படுகிறது. டாஸ்மாக்கால் தான் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. எனவே தான் தமிழ்நாட்டில் மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்கிறோம். கள்ளுக்கு அனுமதி வழங்கினால் அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நிறை இருக்கிறது. குறை இருக்கிறது. பெரியாரை பொறுத்தவரை சில விஷயங்களில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. குறிப்பாக, கடவுளைப் பற்றி பேசியதில் இருந்து, ஒரு சமுதாயத்தை தாக்கி பேசியதில் இருந்து மாறுபடுகிறேன். அதே நேரத்தில், இந்த மண்ணில் பலர் பல கருத்தை பேசியுள்ளனர். இந்தியாவில் சமூக சீர்த்திருத்ததிற்காக பெரியார் உள்ளிட்ட பலர் பாடுபட்டுள்ளார்கள். ஆனால் பெரியாரை தவிர மற்றவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள்.
பாஜக ஆட்சிக்கு வரும் போது ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம். அவர்களுக்கு சிலை வைப்போம். யாருடைய சிலையை எங்கே வைப்பது என்பதை முடிவெடுப்போம். பெரியாரை தாக்கி பேச வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. பெரியாரின் சிலைக்கு பாஜகவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெரியார் சமூகத்திற்கு பல்வேறு நன்மைகள் செய்துள்ளார்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..படுக்கைக்கு வந்த கள்ளக்காதலன்.. மகள்களுக்கு மது ஊத்திக்கொடுத்து ‘என்ஜாய்’ பண்ண சொன்ன தாய்